மாய்ப் பிறந்த என்னிடமும்; ஒள்ளிது - சிவஞானம்; குருமேவினன் - குருவாக வந்து முன்னின்று ஞானவமுது தந்த செயல் குறித்தது; "தோடுடைய" என்ற பதிகம் குருவருள் என்ற கருத்தினைக் கொண்டது. "தோடு கூற்றுப் பித்தா மூன்றும், பீடுடைத் தேசிகன் பேரரு ளாகும்" 4. வெளிப்படை. வெங்குரு - சீகாழியின் நான்காவது பெயர்; - (5) 1. சுடர் (சூடுஆர்) மண்; இம் - ஈமம்; ஆளி - ஆள்பவன்; கைத்தோணி - போர் தொலைத்த தும்பைமாலை; புரத்து அவன் - புரத்தை அவம் பண்ணினவன்; சூடார் என்பது சுடர் எனவும், ஈமம் - இம் எனவும் குறுகிநின்றன; துரோணம் (தும்பை) என்பது தோணி என மருவிற்று; 2. சுடர்மணி - (என் உச்சிக்குச்) சூடாமணி போன்றவர்; மாளி (மாலி) ஆன்மாக்களை ஈடேற்றும் பித்துக் கொண்டவர்; கைத்தோள் - துதிக்கையினையுடைய யானையை; நிபுரத்தவன் - வடிவில்லாமற் செய்தவன் அழித்தவன்; தோல் - என்பது தோள் என நின்றது; தோல் - யானை; 3. சுடர் - சூரியன்; மணி - கழுவி; மாளி - கெட்டவன்; கைத்தோணி - தெப்பம்; புரத்தவன் - புரந்தவன்; காத்தவன்; - சூரியனது களங்கத்தைக் கழுவும் கடல்போன்ற பிறவியில் கெடும் உயிர்கள் கரையேறும் தெப்பமாகப் பிரணவத்தைச் செவியில் உண்டாக்குபவர்; "பெரும் பிறவிப் பௌவத்து......அஞ்செழுத்தின் புணை பிடித்து" - (திருவா); மண்ணி - மணி எனநின்றது இடைக்குறை; புரந்தவன் - புரத்தவன்என வந்தது வலித்தல்; 4. வெளிப்படை.-(6) 1. பூ - பூமியில் உள்ளவர்; சுரர் - தேவர்; சேர் - தோன்றுதல்; பூ - உந்திக்கமலம்; தராயவன் - தரித்தவன்; பொன் - பொலிவு; அடி - (ஆடி) கண்ணாடி; பூவுலகரையும் தேவரையும் தமது உந்திக்கமலத்தில் தோற்றுவிக்கும் பிரமா - விட்டுணுவின் போதத்தில் கண்ணாடியும் நிழலும் போலப் பிரதி விம்பிப்பவன். ஆடி - அடி எனக் குறுகி நின்றது; 2. பூசுரர் - மும்மலத்தையும் கழுவிய சிவஞானிகள்; சேர் - திரட்சி; பூ - பொலிவு; தராய் - பெறப்பட்ட; அவன் - அக்கடவுள்; பொன் - வனப்பு; நடி - நாடகநடிப்பவன் :- சிவஞானிகளின் கூட்டம் பொலிவு பெறத்தக்க வனப்புடைய நடம் செய்பவர்; 3. பூசு - திருநீற்றை உத்தூளணமாகப் பூசும்; உரர் - மார்பையுடையோர்; சேர்பு - அரிதல்; ஊந்தராய் - தள்ளுதல்; யவன் - யௌவனம்; பொன் - அழகு; அடி - மூலம் :- நீறுபூசுமார்புடைய சிவஞானிகளும், பாவத்தை அரிந்து விசுவத்தைத் தள்ளும் சிறப்புடையாரும் ஆகியவர்களுக்கு மூலமாயுள்ளவன்; உந்தராய் என்பது ஊந்தராய் என நீண்டது; 4. வெளிப்படை. பொன்னடி காப்பனவாக என்க.-(7) 1. செருக்கு - மயக்கம்; வாய்ப்பு - மேலீடு; உடையான் - கேடுசெய்யான்; சிரபுரம் - மேலாகிய இருப்பு; என்னில் - என்னுடைய போதமே; தமது திருவருள் ஞானம் வாய்க்கப் பெறாதார்க்கு மலமேலீட்டைக் கெடாத சிவனுக்கு விசுவாதிகமான இருப்பிடம் எனது அறிவே; 2. செர் - சத்தாதிகள் ஐந்தும் சேரப்பட்ட; உக்கு - அந்தப்பூமி; வாய்ப்புடையான் - தன்வாயினிடமாயுள்ளவிட்டுணு; சீர் - சிறப்பு; அபுரம் - உயிர் போன களேபரம்; என்னில் - மேனிலை; பூமியை வாயில் உண்டமாலின் களேபரத்தை மேற்றரித்தவன்; சேர்என்பது செர் என்றும், சீர் என்பது சீர் என்றும் குறுகி நின்றன; 3. செருக்கு - ஆத்தும விகாரமாகிய கர்வம்; வாய் - இந்திரியம்; புடையான் - இடத்தான்; சிரம் - மேல்; புரம் - சரீரம்; என்னில் சத்தியம் :- கர்வத்தினால் இந்திரியங்களுக்கு விடமாகிய சுவர்க்கத்தில் இச்சையுடையானுக்கு அது மெய்யாக விசேடித்திருக்குமன்றே; 4. செருக்கு - இந்திரியப் போருக்கு; ஆய்ப்பு - இளைப்பு; உள்தையான் - உள் தைக்கப்படடான்; சிரபுரம் என்னில் - சிரபுரம் என்று சொன்னால்; கருத்து : ஒருகால் சிரபுரம் என்றால் |