இந்திரியங்களையும் அவியப்பெறாது சிவனடியில் அடைவன்;-(8) 1. பொன் - பொலிவு; நடி - நடிப்பவன்; மாது - காளி; அவர் - பூதகணங்கள்; சேர் - தங்குதல்; புறவத்தவன் - புறங்காட்டிலுள்ளவன்; 2. பொன் - தூய்மையான; அடி - வழி; மாதவர் - தபோதனர்; சேர் - திரட்சி; புறவம் - முல்லைநிலம்; தவன் - தவம் புரிந்தவன்; தூயமாதவர் தவம் புரியும் காட்டில் அவர்கட்குத் தவசியாயுள்ளான்; 3. பொன் - இலக்குமி; அடி - அணிகளின் தொகுதி; மாது அவர் - இருடியர் மனைவி மார்; சேர்பு உறு - பிச்சையிட வந்தணைதல்; அவத்தவன் - கற்புக்குலையச் செய்த நக்கன்; 4. அடிகளிற் பொன்னணிபூண்ட மாதர்கள் சேரும் புறவத்தில் (சீகாழியில்) உள்ளவன்; - (9) 1. தசமுகன் - தயவுடையவனும்; எரிதா - எரிவீசு; ஊன்று - அழுந்து; கண் - வேகம்; பையான் - படமுடைய பாம்பை உடையவனும்; 1. த - அது; கமுகம் - திரட்சி; நெரி - நேரானவன்; தர - புலி; ஊன் - புலால்; துசு - தூசு. (உடை); அண்பையான். விரித்துடுத்தான் :- ஞானிகளின் கூட்டத்துக்கு அது என்ற மெய்ப்பொருளைத் தோற்றுவிப்பான்; புலி உரி உடையான்; 3. தசம் - தைசதம் (அகங்காரம்); உக - கெட; நெரி - எதிர்ப்பட்டவனும்; தாம் - மலை; ஊன் - திருவுள்ளத் தடைத்தல்; து - விசேடஞானமுள்ளவனும்; சண் - ஆறு சமயம்; பையான் - பயனாகவுள்ளவனும்; 4. தசமுகன் - இராவணன்; நெரிதா - முறிய; ஊன்று - விரல் ஊன்றிய; சண்பையான் - சீகாழியில் இறைவர்.-(10) 1. காழியானவன் - நிலைபெற்ற நின்மலசித்தமுடைய பத்தரிடத்து; உள்ளவா - மெய்ப்பொருள் வினையும் பொருட்டு; காண்பரே - நோக்குவரர்; (அருட்கண்ணால் நோக்குவர்); 2. காழியான் - களங்கமுள்ளவன்; (களங்கம் - மிடற்றின்விடம்) அவனது கருணையை; நயனுள்ளவா - ஞானக்கண்ணுள்ளவாறு; காண்பரே - நிலைமையாக நினைப்பரே:- ஞானிகள் சிவனருளை நினைப்பர்; 3. காழியான் - விட்டுணு (காளிமம் - கறுப்புநிறம்) அயன் - பிரமன்; உள்ள - நினைக்க; ஆ - அதிசயம்!; காண் - கண் - கருதுதல்; பரே - அன்னியம்ந கண் என்றபாலது காண் என நீண்டது, கண்ணுதல் - கருதுதல் 4. அயன் - ஐயன்; உள் - அறிவில் உண்டான; அவா - ஆசை; காண்பரே - தரிசிப்பரோ? சீகாழியில் உள்ள என் ஐயனை - ஆசையை - அவ்விருவரும் தேடி மறத்தலொழிந்து எவ்வாறு காண்பர்;-(11) 1. கொச்சை - அறியாமைசெய்யும் ஆணவம்; அண்ணலை - பொருந்துதலை; கூடகில்லார் - மாறுபட்டார்; உடல் - உடலாலே; மூடாரே - மூடப்படார்; ஆணவமயக்கத்தினின்றும் மாறுபட்டார் பிறவிபெறார்; 2. கொச்சை - புலால் நாற்றம்; அண்ணல் - அணுகுதல்; கூடகிலார் - மனம் பொருந்தமாட்டார்; உடல்மூடரே - உடலைப் புதைப்பரே; மூடரே - இரட்டுற மொழிதலால் எதிர்மறையில் புதைக்காதவரே :- புலாலுடைம்பை அழுக்கென்று மனங்கொள்ளாமல் மூடுபவராகிய புத்தரும் மூடாதசமணரும்; 3. கொச்சையள் - துர்நாற்றமுடைய மச்சகந்தி; நலை - புலப்பட்ட அவளது நலத்தைக் கருதி; கூடு - சரீரம்; அகில்ஆர் - அகில் மணம் பொருந்திய; உடன் - அவளுடன்; மூடரே - பொருந்தியவர்; பராசரர்; (காரணமாக) 4. கொச்சை - அண்ணலை - கொச்சை என்ற பெயர்பெற்ற சீகாழியிறைவரை; கூடகிலார் - நேர்படமாட்டார்; உள்தல் - உள்ளுதல்; மூடரே - இருளுடைய போதத்தவரே;-(12) 1. கழுமல் - மிகுதிப்பட்ட குற்றம்; அமுது - சலம்; பதிக்க - விளைவிக்க; உள்நி - உள்ளநீ; கட்டு - வடிவாகக் கட்டுண்ணல்; உரை - தேய்தல் :- மிக்க தோடமுள்ள சுக்கில சுரோணிதமாகிய இருவகை நீரிற் பதிந்து விளையும் உடலுடைய நீ பின்தேய்ந்து மரிக்கும் இப்பிறவி; 2. கழு - கழுவப்படுதல்; மலம் - உது - ஆணவ மலமும், உடன் கூடிய மாயை கன்ம |