|
மலங்களும்கூடிய விளைவாகும்; (மலத்தால் வருவதாம்) பதி - பாதி; கவுணி - உள்ளே அகப்படுத்திக் கவுளீகரித்துக்கொள்ளுதல்; அன்கண் - ஆன்மாவினிடத்து; துரை - இறைவர்; தம் பாதியாகிய அருளினால் என்னை கவுளீகரித்து என்னுள் விளங்கும் இறைவர்; பாதி என்பது பதி எனக்குறுதி நின்றது; 3. கழும் - மயக்கம்; அலக்கம் - அலக்கண் (துன்பம்) படுதல்; அமுது போன்றவரும்; பதி - கருத்தரும்; க - தலை (பிரம கபாலம்)யில்; உணியன் (பலி) - உண்பவரும்; கட்டு விளக்கம்; உரை - பொன் போன்றவரும்; 4. கட்டு - காட்டும் உபதேசமிதனை; உரை - உரைத்துய் வீராக; வெளிப்படை. |
திருஇருக்குக்குறள் |
திருச்சிற்றம்பலம் | பண் - குறிஞ்சி |
|
அரனை யுள்குவீர்!; பிரம னூருளெம்; பரனை யேமனம்; பரவி யுய்ம்மினே. |
(1) |
தொழுமனத்தவர்!; கழும லத்துறை; பழுதில் சம்பந்தன்; மொழிகள் பத்துமே. |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- சிவனையடைந்து உய்யும் நினைவுடையாரை வழிப்படுத்தி அருளும் வகையால் சீகாழிப் பன்னிரு பெயர்களையும் துதித்தது. |
பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) உள்குவீர் - விளி; உள்கும் மனமுடையவர்களே!-(3) புகல் - புகலி ;-(4) பங்கம் - பாதி;-(5) ஆணிநற்பொன் - ஆணி பொன்னை உரையிட்டளக்கும் உரையாணி; ஆணிப் பொன் போன்றார். "அடித்தொண்டராணிப்பொன்" (தேவா - அரசு). உயிர்களது பக்குவங்களை அளந்து ஏற்றவாறு அருள்பவர் என்பது குறிப்பு; இயல்பாகவே பாசங்களினீங்கியவர் என்றதாம்;-(6) பாந்தள் - பாம்பு;-(9) தென்றில் - பகை; தென்றி - தெற்கு என்றலுமாம். இதனால் இராவணனுக்குத் தென்னவன் என்று ஒரு பெயருமுண்டு; "தென்னவன் மலை எடுக்க" (அரசு); - (10) பெயலவை - அருள்பொழிதல்; பெயல் - அருண்மழை; இயலும் - திளைக்கும்; - (11) நேர் - ஒப்பு; - (12) தொழுது உய்யும் மனத்தவர்க்கு மொழிகள் பத்துமே பற்றுக் கோடாவன. பத்து - பெரும் பான்மை பற்றி வந்தது. |
திருஎழுகூற்றிருக்கை |
திருச்சிற்றம்பலம் | பண் - வியாழக்குறிஞ்சி |
|
ஓருரு வாயினை மானாங் காரத், |
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் |
ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் |
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை; |
5 இருவரோ டொருவ னாகி நின்றனை; |
ஓரா னீழ லொண்கழ லிரண்டு |
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி |
காட்டினை; நாட்டமூன் றாகக் கோட்டினை; |
யிருநதி யரவமே டொருமதி சூடினை; |
10 ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் |
நாற்கான் மான்மறி யைந்தலை யரவ |
மேந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத் |
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை; |