|
| யொருதனு விருகால் வளைய வாங்கி |
| 15 முப்புரத் தோடு நானில மஞ்சக், |
| கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை; |
| யைம்புல னாலா மந்தக் கரண, |
| முக்குண மிருவளி யொருங்கிய வானோர் |
| ஏத்த நின்றனை; யொருங்கிய மனத்தோ, |
| 20 டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து |
| நான்மறை யோதி யைவகை வேள்வி, |
| யமைத்தா றங்க முதலெழுத் தோதி |
| வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும், |
| பிரமபுரம் பேணினை; |
| 25 யறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை |
| இகலி யமைந்துணர் புகலி யமர்ந்தனை; |
| பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை; |
| பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த, |
| தோணிபுரத் துறைந்தனை; தொலையா விருநிதி |
| 30வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை; |
| வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை; |
| யொருமலை யெடுத்தத விருதிற லரக்கன், |
| விறல்கெடுத் தருளினை; புறவம் புரிந்தனை; |
| முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப், |
| 35 பண்பொடு நின்றனை; சண்பை யமர்ந்தனை; |
| ஐயுறு மமணரு மறுவகைத் தேரரு, |
| மூழியு முணராக் காழி யமர்ந்தனை; |
| எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை; |
| யாறு பதமு மைந்தமர் கல்வியும் |
| 40மறைமுத னான்கும், |
| மூன்று காலமுந் தோன்ற நின்றனை; |
| யிருமையி னொருமையு மொருமையின் பெருமையு, |
| மறுவிலா மறையோர் |
| கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை, |
| 45 கழுமல முதுபதிக் கவுணிய, னறியு |
| மனைய தன்மையை; வாதலி னின்னை, |
| நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே. |
| திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- இது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகிய ஒரே பாட்டு : ஆயினும் மரபுபற்றிப் பதிகமெனப்படும்; பிள்ளையாரது பதிகத்தில் 8 - 9 - 10 - 11 பாட்டுக்களின் பெரும்பான்மை நியதியாக வைக்கப்பெறும் பொருள்களாகிய இராவணனருள்பெற்றமை, அயன்மாலருள் பெற்றமை, சமணபுத்தர்நிலை, பதிகப் பயன் என்ற இவை 12 பாட்டுக்கள் கொள்ளும் தலப்பெயர்ப் பதிகங்களுக்கேற்ப 47 அடிப்பெருமை கொண்ட இப்பாட்டிலும் அமைதலுங் காண்க. |