பக்கம் எண் :

330திருஞானசம்பந்தநாயனார் புராணம்

     இறைவரது தன்மைகள் பலவற்றையும் தொகுத்து அவரை முன்னிலைப்படுத்திப் போற்றப்பட்டது. பிள்ளையாரது திருப்பதிகங்களை நாடோறும் ஓதிப் பயின்றுவந்த பிதா சிவபாத விருதயர், அவை நாடோறும் பெருகிவருதலின் தம் கருத்துப்படி முற்றும் பயிலப்பெறாது வருந்த, அவர் பொருட்டுப் பிள்ளையார் இதனை அருளி, இஃதொன்றனையே விதிப்படி ஓதினால், எல்லாப் பதிகங்களையும் ஓதிய பயன் கிடைக்கும் என்று வகுத்தருளினர் என்பது வரலாறு. "எந்தைக் கெழுகூற்றிருக்கை" (2174) என்ற ஆசிரியர் திருவாக்கும் இக்குறிப்புடன் நிற்பதென்பர். அவ்வாறு இதனை நாடோறும் விதிப்படி பயிலும் அன்பர் பலர் இதனுள் சீகாழிப் பன்னிரு பெயர்களும் முன் பதிகங்களிற் குறித்த அம்முறையிலே போற்றப்படுதலும் குறிக்க.
     அகத்தியர் தேவாரத்திரட்டு திரு. க. சதாசிவ செட்டியார் உரையிலும், முன் தேவாரப்பதிப்புக்களிலும், கண்டவற்றைத் தழுவி இங்குப் பொருட் குறிப்புக்கள் வகுக்கப்படுகின்றன.
     பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) ஓருவாயினை - தத்துவங்கள் எல்லாங் கடந்து வாக்குமனாதீதகோசரமாய் நின்ற சிவனது சொரூப நிலையினின்ற தேவரீரே உயிர்களுக்கிரங்கி யைந்தொழில் செய்யத் தன்னிச்சையாகவே ஒருதிருமேனி தாங்கினீர்; சொரூபம் தடத்தமாயிற்று; "அகளமா யாரு மறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென்றுந் தீபற; தன்னையே தந்ததென்றுந் தீபற"; மான் ஆங்காரத்துஈர் இயல்பு - சத்தி சிவமாகிய இரண்டு இயல்பு. ஐந்தொழில் நடத்துதலை நினைந்து மேற்கொண்ட நிலை. பொருள் இருவேறன்று என்பார் ஈர் இயல்பு என்றார்; மான் - சத்தி; ஆங்காரம் - உலகுய்யச் செய்யும் நினைவு;-(2) ஒரு - சத்தியுடன் ஒன்றாயினை; படைத்தளித் தழிப்ப - மும்மூர்த்திகளாயினை; முத்தொழில்களை இயற்றற்குப் பிரமன் விண்டு உருத்திரன் என்று திருப்பெயர் பெறும் மூன்று திருமேனி தரித்தனை; இங்குக் கூறிய மும்மூர்த்திகள் முதல்வன் கொண்ட திருமேனிகள்; இவற்றோடு மற்றை அயன்மால் உருத்திரன் என்னும் மூவர் வடிவங்களை ஒன்றாக வைத்தெண்ணி மயங்காமைப்பொருட்டு "இருவரோடொருவ னாகி நின்றனை" எனவேற்றுமையும் உடன் உபதேசித்தருளினர். இம் மும்மூர்த்திகள் முதல்வன் கொண்ட சுதந்திர வடிவமாதலின் ஆயினை என்றும், அவை அதிட்டான பக்கமாதலின் ஆகி நின்றனை என்றும், வேறுபாடு தோன்றக் கூறினார்; அதிட்டித்தல் - நிலைக்களமாகக் கொண்டு செல்லுதல். (5) இருவரோடு ஒருவன் - பிரமவிட்டுணுக்களை இடத்தினும் வலத்தினும் அடக்கிய ஏகபாதத் திரிமூர்த்தி; "ஏழுலகுமாய் நின்ற ஏகபாதர்" (தாண்) - (7) நால்வர் - அகத்தியர் - புலத்தியர் - சனகர் - சனற் குமாரர்; சனகர், சனற்குமாரர், சனாதனர், சனந்தனர் என்றும் கூறுவர். ஒளிநெறி - ஞானநெறி. ஆணவ இருளைப் போக்குதலின் சிவஞானம் ஒளி எனப்பட்டது; - (8) நாட்டம் மூன்று - சூரியன் - சந்திரன் - தீ என்னும் மூன்று கண்கள்; - (9) இரு - பெரிய. நதி - கங்கை; ஒருமதி - ஒரு காலத்திலு முதிராதபிறை; - (10) ஒருதாள் - பிரணவமாகிய காம்பு; ஈர்அயில் ஈருகின்ற - பிளக்கின்ற - கூர்மையுடைய; மூவிலை - அயன் அரி அரன் என்று மூவரையும் அதிட்டிக்கும் சனனி ரோதயித்திரி ஆரணி என்னுஞ் சத்திகளை மூவிலையாகவுடைய; "மூன்று மூர்த்தியுணின்றிய லுந்தொழில்" மூன்றுமாகிய மூவிலைச் சூலத்தன்" (தேவா - திருக்குறுந்) மூவிலைகளை மூவிலைச் சூல மேந்துதல், மூவரும் யானென மொழிந்த வாறே" (ஒற்றி - ஒருபா ஒருபஃது) என்பதும் காண்க.-(11) நாற்கான் மான்மறி - நான்கு மறைகளையும் நான்கு கால்களாகவுடைய மான்கன்று; ஐந்தலை அரவம் - திருவைந்தெழுத்தை ஐந்தலையாக