|
ஆதலின்; நின்னை நினைய வல்லவர் இந்நீணிலத்தில் (இனி வருதல்) இல்லையாவர் - என்று கூட்டி வினை முடிபு படுத்திக் கொள்க. |
பிரமபுரம் |
திருச்சிற்றம்பலம் திருஈரடி | பண் - பழம் பஞ்சுரம் |
|
வரம தேகொளா வுரம தேசெயும் புரமெ ரிதவன் பிரம நற்புரத் |
தரனன் னாமமே பரவு வார்கள்சீர் விரவு நீள்புவி யே. |
(1) |
கழும லத்தினுட் கடவுள் பாதமே கருது ஞானசம் பந்த னின்றமிழ் |
முழுதும் வல்லவர்க்கின்ப மேதரு முக்க ணெம்மிறை யே. |
(12) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- ஏனையவிருத்தங்கள் போல நான்கடி பெறாது இரண்டடிகளால் வருவதால் ஈரடி எனப்பட்டது. இரண்டாமடி இறுதிச் சீர்குறைந்து வந்தது. சீகாழித் தலத்தைப் பரவுமடியார்களுடைய சீர்களைப் பரவும் வகையாற் பன்னிரு பெயர்களையும் சந்தவிகற்பப் பாவினத்தின் நயம்படவைத்துப் போற்றியது. |
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கொளா - கொண்டு; உரம் - வன்மை.-(2) வேணுமண்ணுளோர் - வேண்டும் உலகர்; ஆணி - ஆணிப்பொன்; - (5) கற்றவர்க்குக்காணியும் (நிலமும்) பொருளும் ஈகையுடையோர்; 8வதும் பார்க்க - (6) ஓதி - கூந்தல்.-(7) சுரபுரம் - தேவருலகம்.-(8) அற்றவர்கள் - நல்கூர்ந்தவர். தரித்திரர்; (11) விச்சை - வித்தை; ஞானம்; ஒன்றும் - என்க. உம்மைதொக்கது; பிச்சர் - பித்தர் கரிசு - குற்றம். |
பூந்தராய் |
திருச்சிற்றம்பலம் திருஈரடி மேல்வைப்பு | பண் - காந்தார பஞ்சமம் |
|
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் |
மிக்க செம்மை விமலன் வியன்கழல் |
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி |
நன்ற தாகிய நம்பன் றானே. |
(1) |
புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய் |
அந்த மில்லெம் மடிகளை ஞானசம் |
பந்தன் மாலைகொண் டேத்தி வாழுதும் |
பந்த மார்வினை பாறிடுமே. |
(11) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- முன் ஈரடி ஒரு எதுகை ஒரு சந்தமாகவும், பின் ஈரடி அவற்றின் மேல் ஒட்டிவைத்தது போல வேறு எதுகையும் வேறு முடுகு சந்தமாகவும் வரும் விகற்பச் செய்யுளாதலின் ஈரடிமேல்வைப்பு எனப்பெயர் பெற்றது. மேல்வைப்பாகிய பின்வைப்பு அடிகள் (மகுடம்போல) ஒன்றாகவே எல்லாப் பாட்டுக்களிலும் வருதலும் உண்டு. இப்பதிகத்துள் வெவ்வேறாய் வந்தன. திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகத்துள் ஒன்றாக வந்தது காண்க. இது பூந்தராய் என்ற பெயரால் இறைவரது அருளின் எளிமையைப் போற்றியது. |
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) செம்மை - சிவத்தன்மை; சென்று - உலக நிலையின்மேம்பட்டுச் செலுத்தி;- (2) புள்ளினம் வெள்ளந்தாங்கு - நீர்ப் பெருக்கில் பறவையுருவுடன் தேவர்கள் திருத்தோணியைத் தாங்கின வரலாறு. "நாலைந்து புள்ளின மேந்தின வென்பர்" (திருவிருத்) வெள்ளம் - கங்கை - தாங்கு சடை |