|
என்றலுமாம்.-(4) இந்து - சந்திரன்.-(6) பூதம் - கணங்கள்; நளிர்புனல் - குளிர்ந்த கங்கை.- (7) சே - இடபம்; -(8) போதகம் - யானை; - (9) மத்தம் - செருக்கு. உன்மத்தம் - மத்தம் என நின்றது. இருவர் - அயனரி.-(11) வாழும் - வாழுங்கள். |
திருப்புகலி |
திருச்சிற்றம்பலம் நாலடி மேல்வைப்பு | பண் - காந்தார பஞ்சமம் |
|
இயலிசை யெனும்பொரு ளின்றிறமாம் |
புயலன மிடறுடைப் புண்ணியனே |
கயலன வரிநெடுங் கண்ணியொடும் |
அயலுல கடிதொழ வமர்ந்தவனே |
|
கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள் |
நிலனாடொறு மின்புற நிறைமதி யருளினானே. |
(1) |
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர் |
விண்ணவ ரடிதொழ விளங்கினானை |
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை |
பண்ணிய வருந்தமிழ் பத்தும்வல்லார் |
|
நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம் |
இடராயின வின்றித்தா மெய்துவர் தவநெறியே. |
(11) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- ஓரெதுகை ஒரு சந்தமுள்ள நான்கடிகளின் மேல் வேறெதுகையும் முடுகியவேற்றுச் சந்தமாகிய இரண்டடிகள் வைக்கப்பட்டு வரும் விகற்பப் பாவினம். ஈரடி மேல்வைப்பின்கீழ் உரைத்தவை பார்க்க. இயலிசைகளுக்குப் பொருளாயுள்ளவரே! இரவொடு பகலுமா மெம்மானே! என்று பலவாற்றாலும் சிவனது இறைமைத் தன்மைகளை ஏத்தி முன்னிலைப்படுத்தி, "உம்மை இடர்கெட ஏத்தும் யாம்; எமக்குத் தவநெறியருள் மூவீராக" என்றது. "இடராயின வின்றித்தாம் எய்துவர் தவநெறியே" (11) என்ற பதிகப்பயன் காண்க. |
பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) இயல் - இயற்றமிழ்; இசை - இசைத்தமிழ்; பொருளின்றிறமாம் - இவற்றாற் கருதப்படும் முடிந்த பொருள். அயலுலகு - விண்ணுலகம். கலன் - உண்கலம்; பலிப்பாத்திரம். அணிகலம் என்றலுமாம்; "வெண்டலை மாலை விரிசடை யோற்கே" (திருமந்). நிறைமதி - ஞானம்.-(2) நிலையுறும் இடர் - சகசமலமாகிய ஆணவம். நிலையாத வண்ணம் - வலிகெடும்படி.- (3) தவநெறியருள் எமக்கே - பதிகக் குறிப்பு - பதிகப்பயன் (11) பார்க்க; நம்பிகளது திருத்துறையூர்ப் பதிகமும் பார்க்க. தவநெறி - சிவபூசை - 2-ம் பாட்டுப் பார்க்க.- (6) அரிமா - சிங்கம்; தருவாய் - அவ்வவர்க்கேற்ற பயன்களைப் பொருந்தச் செய்வாய்;-(8) இரவொடு பகலதாம் - காலமானாய்; துன்பவின்பங்களைக் கூட்டிவைப்பாய் என்ற குறிப்புமாம். வழியடியேன் - இப்பிறப்பிலும் முன்னை நிலையினும் வழிவழி அடிமையே பேணினேன்; குர - குராமலரும்; இனமார்தரு - ஒன்றுபோல உயர்ந்த.-(9) உடலினுள்ளாற் பருகிடும் அமுது - அழுந்திய உணர்வினுள் ஊறிப் பருகநிற்கும் தேன். இனி.....நல்கிடு - மறக்குமாறிலாத என்னை மயக்கிப் பிறவி காட்டினாய்; இனி, அது மாற்றி உன்பால் முன்போல் பிரியா திருக்க அருள்; (10) கணிகை நோன்பர் - குரத்தியர்களோடும் பாழியிற்றங்கி |