பொலன் - அழகு. உழுவை - புலி. பொறி - புள்ளி. சுடிகை - உச்சிக்கொண்டை. 11. ஊசி சென்ற வழியே அதிற் கோத்த நூல் செல்லுதல்போல முனிவன் சென்ற வழியே அம்மைந்தன் சென்றான் என்க. புதல் - புதர், ஈற்றுப்போலி. புதல் - குத்துச்செடி. அக்காட்டில் புதர்கள் நெருங்கிக் கிடக்கின்றமையால் இடையிடையே அகற்றிச் சென்றனர் என்க. பேர் அயர்வு;பெருமை + அயர்வு, தொழிற் பெயர். அயர்வு - தளர்ச்சி. 12. அம்முனிவனும் மைந்தனும் செல்லும் வழியில் முட்காடுகள் ஒன்றோ டொன்று நெருங்கிக் கிடத்தலால் அவற்றை யொதுக்கிச் சென்றனர் என்பார், 'ஒருங்கார நிறைமுளரியுழை யொதுக்கி நுழைந்தும்' என்றார். அவ்விருவர் செல்லும் வழியில் மலைகளின் குகைள் ஏற்றிழிவு முதலாயின குற்றங்களுள்ளனவாதலின் 'உயர்மலையின் குகைகுதித்தும்' என்றும் கூறினர். முளரி - முட்காடு, ஆர - செறிய, செயவெனெச்சம் காரணீப் பொருட்டு, ஆர் - பகுதி. கானம் நதி - காட்டாறு. 13. அம்முனிவனால் மூட்டிய நெருப்புக் கொழுந்து விட்டுக் காற்றால் வளைந்து அசைதல் ஆங்குவருபவரை அழைத்தல் போலுள தென்பார், 'தன்நுண் நிறுவுதலை வளைத்து அழைக்கும் நெருப்பொன்றும்' என்றார். அம்முனிவன் தங்கிய இடம் சிதாகாச வடிவமாதலின், மனைக்குரிய வாயில், பூட்டு, மதில முதலியன வின்றி விளங்கியது என்றார். ஒன்றும் - சிறிதும். நுண் - நுண்மை. மரபு - முறைமை. 14. வேம்பு தான்றி முதலியவிறகுகளை யொழித்துத் தவத்திற்குரிய ஆல், அரசு முதலிய விறகுகள் என்பார் 'நிமலவிறகு' என்றார். பத்தரில், இல் ஐந்தனுருபு, ஒப்புப் பொருள். விமல - தூய்மையான. 15. பனிப்பு - நடுக்கம்;தொழிற்பெயர். பலமூலம் - பலத்தைத் தரும் கிழங்கு, பலவாகிய மூலங்கள் எனினுமமையும்;இது தொகுதி யொருமை. 16. தம்முடைய நாவினாலே குண்டலியை எழுப்பி ஒரு விரற்கடை தூரத்தைக் கடந்து, அமுதகலையை யுண்ண வகையறியாது, முத்தியைப் பெறக் கடலையும் பல மலைகளையும் கடந்து சென்று திரிகின்றமையால் யாதொரு பயனுமில்லை யென்பதாம். சாகரம் - கடல், சகரபுத்திரரால் தோண்டப்பட்டது;தத்திதாந்த நாமம். மதி - அறிவு. கந்தம் - கிழங்கு. அனந்த - அளவற்ற. வகுத்து - ஒழுங்கு படுத்தி. 17. உறைதி - தங்குவாய், ஏவல் முன்னிலை வினைமுற்று; உறை பகுதி, இ ஏவல் முன்னிலை வினைமுற்று விகுதி; த் எழுத்துப் பேறு, இகரவிகுதியே எதிர்காலத்தைக் காட்டிற்று. திருந்த - செம்மையாக. 18. முனிவர் நம்முண்மையுணர்வாராயின் எங்ஙனம் சபித்திடுவரோ என்னும் அச்சத்தால், 'அருகே ஏகாமல் எதிர் ஒன்றும் இசையாமல் தனியே மனமிறந்து புறம் ஒதுங்கி வறிதிருந்தமகன்' என்றார். இறந்து - கடந்து;ஈண்டுக் குழைதல் மேற்று. மலைவு - மயக்கம். பகர் - கூறு. 19. முனிவர் பெண்ணென்று தெரிந்து கொள்ளாதபடி பாதி முகமதியை ஒரு கைப்பதுமமலரால் மறைத்ததாகும். முக மதி என்பதும் கைப்பதுமலர் என்பதும் உருவகம். சூரியனைக் கண்டால் தாமரை மலர்வதும் சந்திரனைக் கண்டால் கூம்புவதும் இதனால் அறியக்கிடந்தது. 20. பூனைக்குட்டி எலியைப் பிடிக்கும்போது அவ்வெலியைப் பிடிப்
|