பக்கம் எண் :

மனோன்மணீயம்
205

பதும் விடுவதும் இயல்பாதலால் அங்ஙனமே அக்கினியும் கொழுந்து விட்டெரியுங்கால் விளங்கியும், தணியுங்கால் அடங்கியும் இருத்தலால், 'எலி பிடித்தலைக்கும் சிறு பூனை' உவமை கூறப்பட்டது. சிறு பூனை என்றது பூனைக்குட்டியை. இது முதல்நூலிற் கண்டது. அக்கினி சடசடவென்னும் ஒலியோடு கொழுந்துவிட்டு எரிதலை, 'விந்தையொடு நடம்புரிந்து' என்றார். வீங்குதல் - அதிகரித்தல். வாங்குதல் - உட்கொள்ளல், வளைதலும்ஆம். திகழ்ந்து - விளங்கி.

21. இத்தகைய அன்புடைய மௌன முனியை வெறுத்தமைபற்றித் தனக்குண்டான வருத்தத்தாலும் நாணத்தாலும், 'மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய முகங்கவிழ' என்றார். குறி என்றது முகக்குறியை, குறி - அடையாளம். எல்லாப்போகங்களும் அனுபவித்தற்குரிய பருவம் இளமையாதலால் 'எழிலாரும் இளமையினில்' என்றார். இடையூறு - துன்பம், முதனிலை திரிந்த தொழிற்பெயர். புகல் - சொல். வதிந்த - தங்கிய, எழில் - அழகு. இவண் - இவ்விடம்.

22. இருப்பது - வினைமுற்று. பெயர்த் தன்மை யடைந்தமையால் ஒன்றன்பாற் படர்க்கை வினையாலணையும் பெயர். ஓதாய் - சொல்வாய்;ஏவல் வினைமுற்று விகுதி, ஓதுபகுதி, ஆய் ஏவல்வினைமுற்று விகுிதி, எதிர்காலத்தை யுணர்த்திற்று. கழறாய் என்பதும் அது. இழந்தனையோ வரும்பொருளை என்று கொண்டு வரும்பொருள் என்பதற்குக் கிடைக்க வேண்டிய பொருள் என்று கூறினுமமையும். மெய்விடுத்துக் கழறாய் - அதாவது உன் உடம்பின் உண்மை இயலை வெளிப்படையாகக் காட்டிச் சொல் எனலும் ஆம்.

23. அஞ்ஞானம் நிறைந்த இவ்வுலகத்தில் தோன்றும் சுகம் துக்கமேயாதலானும், அச்சுகம் இன்பம் பயப்பதாயினும் ஒரு கணப்பொழுதும் நிற்காமல் அழியும் ஆசலானம், 'இவ்வையகத்தில் அமைந்தசுகம் அனைத்தும் அழலால் இங்கெழுந்தடங்கு நிழலாக நினையாய்' என்றார். அழல்கொழுந்து விட்டெழும்பொழுது அதைச் சூழ்ந்துள்ள மரங்கள் முதலியவற்றின் நிழல் பலவாகத் தோன்றுதல் போல இன்பம் பலவாகத் தோன்றினும் அவ்வழல் தணிந்தபோது நிழல் தோன்றாமை போலச் சுகமும் தோன்றா தென்பதாம். இலவுகாத்த கிளி யென்பது முள்ளிலவின் பழம் செக்கச் செவேலென்று கொவ்வைக்கனி போலத் தோன்றுதலால், அதனைக் கொவ்வைக்கனி என்று கருதிக் கிளி தின்னும் பொருட்டுக் காத்துக் கொண்டு இருக்கையில் அக்கனி வெடித்து அதனின்றும் பஞ்சு வெளிப்படக் கண்டு கிளிப்பிள்ளை நாணும் என்க.

24. முயற்கொம்பு (கோடு) இல்பொருள் ஆதலால், பெண்கள் பிறர்பால் ஆசை கொண்டவர்போலக் காணப்படினும் அது பொய்ம்மையேயாம். ஆகாயத்தாமரை, ஆமை மயிர்க் கம்பளம் என்பனவும் இல்பொருளேயாம். பெருங் கபடம் இடுகனலன் என்றது, எளிதிற் கண்டுபிடிக்க முடியாத வஞ்சகத்தை இட்டுவைத்த பாத்திரம் எனற்கு. காலன் கலம் என்பதன் போலி. நறுநெய் - மணம் பொருந்திய நெய். பிறங்கும் - விளங்கும்.

25. ஆண்வேடம் தரித்திருக்கும் சிவகாமி தன் காதலனை வெறுத்தமையால் அம்முனிவர் சொல்லிய மொழிக ளெல்லாம் சுடுதலால், 'இசைத்த வசையுட்கொண்டு' என்றார். கனவு - எதிர்மொழி நனவு. அதாவது கண் விழிப்பிற் றோன்றுந்