பக்கம் எண் :

மனோன்மணீயம்
206

தோற்றம். கனாத் தோற்றத்தினும் உண்மையாக நெடும்பொழுது தோன்றியதனால் 'நீள் கனவு' என்றார். நாணத்தால் முகம் வெளுத்து மனம் நொந்து நின்றமையால், 'வெயிலில் விளக்கொளியும் மின்னொளியிற் கண்ணும், வெளிப்பட்ட கள்வனும்போல் வெட்கி முகம் வெளுத்தான்' என்றார். வறிஞன் கனவிற்கண்ட பொருள் நினைவில் கைகூடாமையால் வருந்துதல் போல முனிவன் சொல்லிய சொற்களால் தன் செய்கை வெளிப்பட்டமையால், வெயில்முன் விளக்கொளியும் மின்னொளிமுன் கண்ணும் பலர் முன் கள்வனும் ஒளி மங்குதல்போல நாணத்தால் முகம் வெளுத்தான் என்க. ஏதிலன் என்றது ஈண்டு வறிஞனை;பொன் சிறிதும் இல்லாமையால், அடிகள் - முனிவர். வசை - பழமொழி.

26. வெட்ட வெளியான என்பது வெளிப்பட்டு விட்டன என்னுங் கருத்துள்ள குறிப்பு மொழித்தொடர். இரகசியங்கள் எல்லாம் என்றது பெண் ஆண் வேடம் தரித்தமையையும் தன்னுடைய பந்து என்பதையும் என்க. யதி - முனிவர். இறும்புது - வியப்பு.

27. கற்பம் அனுகற்பம் உபகற்பம் என்று சொல்லப்படும் விபூதியுள் ஒன்றை யணிவார்க்குப் பகை, பிணி, பேய், சூனியத்தாலாம் தோடம் முதலியவை யுண்டாகா வென்பார். 'நின்மல விபூதி' என்றார். பொன்மயமெய் விபூதி யுள்ளே தோன்றி என்பது உபமேயம். நீறுபடி நெருப்பெனவே நிலாவி என்பது உபமானம். குருவாகிய முனிவன் தன் கண்ணால் முகத்தை நோக்கினமையால், ஆண்வேடம் தரித்த பெண் மகள் மனம் கூசி நாணத்தால் தன் இரண்டு விழிகளும் மெய்நெறியை விட்டுத் தான் பெண் என்பதைத் தெரிவித்தன என்பதாம்.

28. தன் உண்மையை முனிவர் தெரிந்து கொண்டார் என்னும் மகிழ்ச்சியால் கூசிய முகம் பெண்மைக்குரிய குணமாகிய நாணத்தோடு கோணி எழில் வீசுதலையும், சடைக்கோலம் ஒழிந்து சூழற்பாரஞ் சரிதலையும், வெய்துயிர்ப்பையும், ஆண்வேடம் ஒழிந்து பெண்வேடம் தோன்றுதலையும் கண்டார் முனிவர் என்பதாம்.

29. முனிவர் வசிக்குமிடம் பரிசுத்தமுடைய தாதலானும், வேத மோதுதல், ஓமம் வளர்த்தல் முதலியன உடையதாதலானும், அவிர்ப்பாகம் பெறத் தேவர்கள் நெருங்குதலானும், 'தெய்வமொடு நீ வசிக்குந் திருக்கோயில்' என்றார். செமித்தருள்வை - முன்னிலை வினைமுற்று;செமித்தருள் பகுதி, ஐ - விகுதி, வ் - எதிர்கால இடைநிலை.

30. காவிரிப்பூ மாநகர் என்றது காவிரிநதி கடலொடு சங்கமமாகுமிடத்திலுள்ள பட்டினத்தை, குற்றமில்லாத குலமும், விருந்தினரை யுபசரித்தலும், யாவரிடத்தும் அன்பும் நாயகனது குறிப்பறிந்து ஒழுகும் ஒழுக்கமும், வாய்மையும், கோபமின்மையும், கற்பும், பெற்றதைக் கொண்டு உவக்கும் உவப்பு முடைமையால், 'எண்ணரிய குணமுடையாள்' என்றார். நற்குணமுடைய பெண் ஒருத்தியுண்டு. அவள் வயிற்றில் இரண்டு பெண்களும் ஒரு பிள்ளையும் பிறந்தார்கள் என்பதாம்.

31. சாப்பிள்ளையே பெறுதலும், ஒரே பிள்ளை பெறுதலும், பெண்களையே பெறுதலும், எதையும் பெறாதிருத்தலுமாகிய நால்வகை மலடியுள், சிவகாமியின் சிற்றன்னை ஒருமகவும் பெறாமலடி யாதலால், 'முழு