அ அகிலாண்ட ஐயர். பூர்வம் தஞ்சாவூர். ஐதராபாத்தில் (Hyderabad)பாரிஸ்டர் அட் லா (Barrister-at-law) வாயிருந்தார். இவர் வீணை நன்றாய் வாசிப்பார். இந்திய சங்கீதத்தை மேற்றிசையாருக்கு சொல்லிவந்திருக்கிறார். அகோபிலர். இவர் கடப்பை ஜில்லாவில் அகோபில மடத்துக்குச் சமீபத்தில் இற்றைக்குச் சுமார் 300 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். சங்கீத இரத்னாகரத்தையும், ஆஞ்சநேயமதத்தையும் அனுசரித்து சங்கீத பாரிஜாதம் என்ற சங்கீத இலட்சண கிரந்தத்தை எழுதியிருக்கிறார். அக்கிள்சுவாமி. இவர் சிதம்பரத்துக்குச் சமீபம் ஒரு கிராமத்திலிருந்தவர்.சமஸ்கிருதத்தில் கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். இவருக்குண்டாயிருந்த பெருவியாதிக்கு கலியாணி இராகத்தில் "தாவக்க கரக்கமலே" என்ற கீர்த்தனம் பாடிப்பகவானை பிரார்த்திக்க - அ அகிலாண்ட ஐயர். பூர்வம் தஞ்சாவூர். ஐதராபாத்தில் (Hyderabad)பாரிஸ்டர் அட் லா (Barrister-at-law) வாயிருந்தார். இவர் வீணை நன்றாய் வாசிப்பார். இந்திய சங்கீதத்தை மேற்றிசையாருக்கு சொல்லிவந்திருக்கிறார். அகோபிலர். இவர் கடப்பை ஜில்லாவில் அகோபில மடத்துக்குச் சமீபத்தில் இற்றைக்குச் சுமார் 300 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். சங்கீத இரத்னாகரத்தையும், ஆஞ்சநேயமதத்தையும் அனுசரித்து சங்கீத பாரிஜாதம் என்ற சங்கீத இலட்சண கிரந்தத்தை எழுதியிருக்கிறார். அக்கிள்சுவாமி. இவர் சிதம்பரத்துக்குச் சமீபம் ஒரு கிராமத்திலிருந்தவர்.சமஸ்கிருதத்தில் கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். இவருக்குண்டாயிருந்த பெருவியாதிக்கு கலியாணி இராகத்தில் "தாவக்க கரக்கமலே" என்ற கீர்த்தனம் பாடிப்பகவானை பிரார்த்திக்க - ரோகம் முழுவதும் நீங்கி நல்ல சௌக்கியம்பெற்றதாகச் சொல்லுகிறார்கள். இற்றைக்குச் சுமார் 70 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். அங்கண்ணா. தஞ்சாவூர். இவர் கர்நாடக முறைப்படி மிருதங்கம் நன்றாய்வாசிப்பார். லயக்கியான சம்பன்னர். தற்காலத்திலுள்ளவர். அங்கண்ணா. வேங்கடகிரி சமஸ்தானம். இவர் வீணை நன்றாய் வாசிப்பார். அண்ணாசாமி சாஸ்திரி. 1827-1900. இவர் சாமாசாஸ்திரிகளின் ஜேஷ்டபௌத்திரர். வாய்ப்பாட்டிலும் பிடில் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். அநேக கீர்த்தனைகளையும் தானங்களையும் செய்திருக்கிறார். அண்ணாச்சி ஐயர். தஞ்சாவூரில் சரபோஜிமகாராஜா காலத்தில் (1798-1824)சமஸ்தானவித்வான். வீணையிலும் பாட்டிலும் பேர் பெற்றவர். அண்ணு, சோழமுத்து, இராமசுவாமி. இம்மூவரும் சகோதரர்கள். இவர்களில், அண்ணும் இராமசுவாமியும் மிருதங்கம் வாசிப்பார்கள். சோழமுத்து பரத நாட்டியய்ம கற்றுக்கொடுப்பதிலும் பிடில் வாசிப்பதிலும் பேர்பெற்றவர். அத்துக்கான். குவாலியர் சமஸ்தான வித்வான். சரபோஜிமகாராஜா சபையில்பாடி சன்மானம் பெற்று போயிருக்கிறார். அப்பன். இவர் வெகு இனிமையாயும் சம்பிரதாயமாயும் பிடில் வாசிப்பார்.இவருக்கு 5 பிள்ளைகள். அவர்களில் மூத்தவர் அப்புக்குட்டி பிடில் வெகுசுத்தமாய் வாசிப்பார். மற்றவர்கள் வாய்ப்பாட்டிலும் வீணை முதலானவைகளிலும் சிறந்தவர்கள். அப்பாக்கண்ணு. பொன்னுசாமி மாணாக்கர். பிடில் நன்றாய் வாசிப்பார்.அவர் மருமகன் மாணிக்கமும் நாராயணசாமியும் பிடில் நன்றாய் வாசிப்பார்கள். அப்பாக்கண்ணு பிள்ளை. வீணை அப்பாக்கண்ணுபிள்ளை யென்றுபெயர்வழங்கும். சிதம்பரத்தில் இப்போதிருக்கிறார். வீணை வாசிப்பதிலும் பரதநாட்டியம் சொல்லிவைப்பதிலும் மிகத்தேர்ந்தவர். அநேகர் இவரிடத்தில் படித்திருக்கிறார்கள். அப்பாசாமி ஐயர். இவர் மகா வைத்தியநாதையரின் சகோதரர். தமையனார்கூடவேயிருந்தவர். சங்கீதத்தில் நல்ல ஞான முள்ளவர். தற்காலம் இருக்கிறார். |