அப்பாஜி ஐயர், வேங்கட ஐயர். கோயம்புத்தூர். இவர்கள் மிருதங்கம் சுகமாய் வாசிப்பார்கள் அப்பாத்துரை ஐயங்கார். இராமநாதபுரம் ஸ்ரீனிவாசையங்காரின் மாணாக்கர்.ஜலதரங்கம் நன்றாய் வாசிப்பார். அப்பாத்துரை ஐயர். திருப்பூந்துருத்தி. இவர் வீணை திருமலை ஐயரின்மாணாக்கர். சிவாஜி மகராஜாகாலத்தில் (1824-1865) தஞ்சாவூர் சமஸ்தான வித்வானாயிருந்தவர். சங்கீதத்திலும் பரதசாஸ்திரத்திலும் தேர்ந்தவர். இவரதுபிள்ளை பஞ்சாபகேச பாகவதரும் மாணாக்கர் கிருஷ்ண பாகவதரும் சிறந்த வித்வான்கள். அப்பாய். இவர் சபாபதியின் குமாரர். பிடில் நன்றாய் வாசிப்பார். இவர்குமாரர் கன்னி மிருதங்கத்தில் தேர்ந்தவர். அப்பாவு. இவர் நாகலிங்கத்தின் தம்பி. பிடில் நன்றாய் வாசிப்பார். அப்புக்குட்டி, சாமுக்குட்டி. இவர்கள் சகோதரர்கள். வாய்ப்பாட்டில் மிகச்சிறந்தவர்கள். அப்பு பாகவதர். இவர் பரமேஸ்வரபாகவதரின் மாணாக்கர். வெகுவிசித்திரமாய்ப் பாடுவார். இவர் தம்பி பிடில் நன்றாய் வாசிப்பார். அப்பையர். இவர் வீணை விஜயவராகப்பையரின் பௌத்திரர்.அநேகவாத்தியங்களில் சிறந்தவராய் இந்துஸ்தானி நன்றாய்ப்பாடி பலசமஸ்தானங்களில் சன்மானம் பெற்றிருக்கிறார். இவர் குமாரர் தசவாத்தியம் கிருஷ்ணையர். அமியப்பா, முனுசாமி, முத்து. இவர்கள் மிருதங்கத்தில் மிகத் தேர்ந்தவர்கள்.அழகாய் வாசிப்பார்கள். அம்பாயிரம். பிடில் வெகு நன்றாய்வாசிப்பார். இவர் வாசிப்பை தஞ்சாவூர்இராமா நாயுடு பங்களாவில் வாசிக்கக்கேட்ட பைடால குருமூர்த்திசாஸ்திரி இவருக்குச் சிங்கக்குட்டி என்று பேர்வைத்தார். இவர் பிள்ளை அப்பன் பிடில்வாசிப்பது சம்பிரதாயமாய் இருக்கும். இவருக்கு 5-பிள்ளைகள். அவர்களில் மூத்தவராகிய அப்புக்குட்டி பிடில் வெகு சுத்தமாய் வாசிப்பார். மற்றவர்களுக்கு வாய்ப்பாட்டிலும் வீணை முதலானவைகளலும் சிறந்த ஞானமுண்டு. அயிலாண்டம். (அகிலாண்டம்) இவள் குருமூர்த்தி நட்டுவனாரிடம் வீணையும்பரதமும் கற்றுக்கொண்டு ஸ்ரீரங்கத்திலிருந்தாள். இவள் பெண்களும் வீணைவாசிப்பதிலும் ராகம் பல்லவி பாடுவதிலும் க்ஷேத்திரிய பதங்களை பரதபாவத்துடன் பாடி ஆடுவதிலும் பெயர் பெற்றவர்களாயிருந்தார்கள். இரங்கநாயகி, குந்தளம், சொக்கு இவர்கள் பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் சிறந்தவர்கள். அரிகர பாகவதர். இவர் இப்போது வீரவநல்லூரிலிருக்கிறார். பிடில் நன்றாய்வாசிப்பார். அரிகதைகளும் சிவகதைகளும் செய்வார். இவர் முத்தையாபாகவதரின் சகோதரர். அரிதீர்த்த ஐயர். இவர் இராமபாகவதரின் மாணாக்கர். வாய்ப்பாட்டுநன்றாய்ப்பாடுவார். இப்போது புதுக்கோட்டையிலிருக்கிறார். அரிராவ். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். அருணாசல ஐயர். காஞ்சிபுரம். இவர் திருவாலங்காடு ஐயாவையரின்மாணாக்கர். இவருக்கு மிருதங்கம் கடவாத்தியமும் நன்றாய் வாசிக்கத் தெரியும். அருணாசல ஐயர். பட்டணம், நன்றாய்ப்பாடுவார்.
|