பக்கம் எண் :

178
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

அருணாசலக் கவிராயர். சீகாழியிலிருந்தவர். தமிழ்ப்பாஷையிலுள்ளஐந்திலக்கணங்களையும் நன்றாய் அறிந்தவர். துளஜாமகராஜா (1763-1787) காலத்திலிருந்தவர். இவர் இராமாயண கதைகளை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற இரசங்களுடன் தகுந்த இராகங்களில் வர்ணக்கிரமங்கள் விளங்கும்படி 6-காண்டங்களுக்கும் தமிழில்கீர்த்தனங்கள் செய்து சென்னப்பட்டணம் மணலி முத்துகிருஷ்ண முதலியார் அவர்களின் சபையில் அரங்கேற்றிக் கனகாபிஷேகம் பெற்றவர்.

அருணாசலஞ்செட்டியர். ஐமீன்தார் தேவகோட்டை. வாய்ப்பாட்டிலும், சுரபத்முதலிய வாத்தியங்களிலும் தேர்ந்தவர். சங்கீத சாஸ்திரத்தை அறிந்தவர்.

அருணாசலமும், குருசாமியும் காஞ்சிபுரத்திலுள்ளவர்கள். மிருதங்கமும்கடமும் நன்றாய் வாசிப்பார்கள்.

அருணாசலம். இவர் மகாதேவன்பரம்பரையைச் சேர்ந்தவர்.நல்லப்பாவின்தம்பி, இவருக்கு சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு.

அருணாசலம். கார்வெட்டிநகரம். வாய்ப்பாட்டிலும் கிஞ்சிராவிலும்கெட்டிக்காரர்.

அழகசிங்கையா. இவர் வீணை ஜீயரின் குமாரர். வீணை வாசிப்பதிலும்அநேகருக்கு சிட்டை சொல்லிவைப்பதிலும் சிறந்தவர்.

அழகநம்பி. இவர் மிருதங்கம்வாசிப்பது மிக அழகாயிருக்கும். தற்காலத்தில்கும்பகோணத்திலிருக்கிறார்.

அனந்தராம பாகவதர். இவரை பாலக்காடு அனந்தராமபாகவதர் என்றுசொல்வார்கள். தற்காலத்தில் கும்பகோணத்திலிருக்கிறார். வாய்ப்பாட்டில் மிகத் திறமையுடையவர். கதைகளும் செய்வார். பிடில்முதலிய வாத்தியங்களிலும் பழக்கமுண்டு.

அனந்தராமையர். இவர் மகாதேவையரின் மாணாக்கர். மிக விரிவாயும்அழகாயும் வாய்ப்பாட்டுப் பாடுவார். அரிகதையும் செய்வார். தற்காலத்திலுள்ளவர்.

அனந்தராமையர். சாத்தனூர் பிடில் அனந்தராமையர் என்று சொல்லுவார்கள்.பிடில் நன்றாய் வாசிப்பார். வாய்ப்பாட்டும் பாடுவார். தற்காலம் கும்பகோணத்திலுள்ளார்.

அனந்தாச்சாரியார். கோயம்புத்தூர். கடவாத்தியத்தில் மிகத் தேர்ந்தவர்.

அஸ்ட்ரக கெங்காராம். இவர் குவாலியர் பலவந்தராவின் மாணாக்கர்.சங்கீதத்தில் மகா வித்வான்.

ஹரிநாயக். 1500 இவர் "சங்கீதசாரம்" என்ற புஸ்தகம் செய்திருக்கிறார்.

ஆ

ஆதப்பா (பச்சிமிரியம்) இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரியவித்வான். அனேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். இவரது பேரப்பிள்ளை வீணை சுப்புக்குட்டி ஐயர். வீணை அழகாயும் சம்பிரதாயமாயும் வாசிப்பார். இவர் குமாரர் சுப்பண்ணா வீணையை ஒழுங்கு தவறாமல் வாசிக்கத்தக்கவர்.

ஆதப்பையர். இவர் தஞ்சாவூரில் பிரதாபசிங் மகராஜா, துளஜாஜி மகராஜாகாலங்களில் (1740-1787) சமஸ்தான வித்வானாக இருந்தவர். பாலசிட்சைக்காக வேண்டிய வர்ணங்களும் கீதங்களும் ரக்தி ராகங்களிலும் தேசிக ராகங்களிலும் செய்திருப்பதோடு ஸ்ரீ வேங்கடரமண முத்திரையுடன் விசேஷ கமக ஜாதிகளில் அநேனக கீர்த்தனங்