களும் செய்திருக்கிறார். இராகா லாபனை மத்திமகால பல்லவி பண்கள் இவரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. வாயால் பாடவும் வீணையில் வாசிக்கவும் மிக ரஞ்சினை கொடுக்கிற "வெரிபோனி" யென்ற தானவர்ணத்தை பைரவி ராகத்தில் செய்திருக்கிறார். இவர் குமாரர் வீணை கிருஷ்ணையர். ஆதிமூர்த்தி ஐயர். இவர் பல்லவி கோபாலையரின் பிள்ளை. சிவாஜிமகராஜாகாலத்தில் (1824-1865) சமஸ்தான வித்வான். சல்லகாலி கிருஷ்ணையரின் ஞாதி. வீணை மிக அழகாய் வாசிப்பார். இவருடைய பிள்ளை வீணை வேங்கிடாசல ஐயர். ஆயில்யமகாராஜா. திருவனந்தபுரம் சமஸ்தானாதிபதி. இவர் பாட்டிலும்வீணைவாசிப்பதிலும் சிறந்தவர். 40 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். ஆறுமுகம் இராயபுரம். இவர் பிடில் நன்றாய் வாசிப்பார். ஆனந்தகுமாரசாமி. A. இவர் Honorable P. குமாரசாமியின் குமாரர்.இவரும் இவர் சமுசாரமும் சங்கீத சாகித்தியங்களிலும் வீணைவாசிப்பிலும் கெட்டிக்காரர்கள். Clements எழுதிய "Introduction to Indian Music" என்ற புஸ்தகத்துக்கு முகவுரை எழுதியிருக்கிறார். 1909-ல் "Essays in national Idealism" என்ற புஸ்தகம் செய்திருக்கிறார். அதில் முதல் 20-பக்கம் இந்திய சங்கீதத்தைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. கொழும்புவாசியான இவர் லண்டனில் இருக்கிறார். ஆனை ஐயர். இவர் சகோதரர் ஐயாவையர். இவர்களை ஆனை ஐயா என்றுகூப்பிடுவார்கள். சரபோஜி மகராஜா காலத்தில் (1798-1824) சமஸ்தான வித்வானாயிருந்தவர். சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, சங்கீதம் முதலியவைகளில் மிகத் தேர்ந்தவர். தமிழில் அனேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். இ இரகுபதிராவ். இவர் கமாஸ்தார் மாதவராவின் குமாரர். நன்றாய்ப்பாடுவார்.சுரபத்தும், மிருதங்கமும் மிக அற்புதமாய் வாசிப்பார். இரங்கசாமி. ஸ்ரீரங்கம். அந்தனூல் சுப்பையரின் மாணாக்கர்.அநேகவர்ணங்களையும் கிருதிகளையும் செய்திருக்கிறார். சம்பிரதாயமாய்ப் பாடுவார். பிடில் சுரபத் நன்றாய் வாசிப்பார். இவர் மாப்பிள்ளை சுப்பையா மாமனாரைப்போலவே பாடுவார். இரங்கசாமி ஐயங்கார். இவர் சென்னப்பட்டணம் வேப்பேரியில்சிறுவர்களுக்குச் சங்கீதபாட சாலைவைத்துச் சொல்லிக்கொடுத்துக் கொண்டும் மாதாந்த சங்கீதப்பத்திரிகை போட்டுக்கொண்டுமிருக்கிறார். வீணை, பிடில் நன்றாய் வாசிப்பார். இரங்கசாமி முதலியார். குளித்தலை. சிதம்பரத்தில் சங்கீதவித்வானாயிருக்கிறார். இரங்காச்சாரியார். இவர் தஞ்சாவூர் சுப்பராயசாஸ்திரியின் மாணாக்கர். பிடில்சம்பிரதாயமாயும் சுத்தமாயும் வாசிப்பார். சென்னபட்டணம் சின்ன சிங்களாச்சாரியாரும் பெரிய சிங்களாச்சாரியாரும் இவரது மாணாக்கர்கள். இரங்காச்சாரியார். இவரை ஸ்ரீபெரும்புத்தூர் இரங்காச்சாரியார்என்றழைப்பார்கள். இவர் அலசூர் கிருஷ்ணையரின் மாணாக்கர். நல்ல தாளஞானமுடையவர். பல்லவி அநேகசுதிகளில் பாடுவார். இரங்காச்சாரியார். சந்திரகிரி. அலசூர் கிருஷ்ணையர் குமாரரானசுப்பராயசாஸ்திரியாரின் மாணாக்கர். பிடிலில் கமக மார்க்கங்களை வெகு அழகாய் வாசிப்பார்.
|