இரத்தினதேவி. சங்கீதசாகித்தியத்திலும் பாட்டிலும் கெட்டிக்காரர். அந்த அம்மாள் 30 நிபால், பஞ்சாப் கீர்த்தனைகளை 1913-வது வருஷத்தில் அச்சுப்போட்டு பிரசுரப்படுத்தியிருக்கிறார். இரபீந்தரநாத் தாகோர். இவர் வங்காளத்தில் உலகப்பிரசித்தமான தாகோர்குடும்பத்தைச் சேர்ந்தவர். வங்காள சங்கீதசாகித்தியங்களில் பிரபலமான வித்வான். இராகவாச்சாரியார். பெங்களூர். நன்றாய்ப்பாடுவார். இராகவையங்கார். முன்சீபுதார் மன்னார்குடி. கன ராகங்களைநன்றாய்ப்பாடுவார். வீணையும் வாசிப்பார். இராகவையர். இவரை கோயம்புத்தூர் இராகவையர் என்றழைப்பார்கள். கனநய தேசிகங்களை நன்றாயறிந்து அழகாய்ப் பாடுவார். இவர் திருவனந்தபுரம் சமஸ்தானம் பரமேஸ்வரபாகவதரின் மாணாக்கர். இராகவையர். இராமானுஜ ஐயர், எம்பெருமானார். இவர்கள் சகோதரர்கள்.இராகவையரும் எம்பெருமானாரும் பிடில் அற்புதமாய் வாசிப்பார்கள். இராமானுஜ ஐயர் கர்நாடகம் சுத்தமாய்ப் பாடுவார். இராகவையர் குமாரர் நம்பெருமாளையா பிடில் நன்றாய் வாசிப்பார். இராகவையரும் இவர் குமாரர்களும் வீணை சுகமாய் வாசிப்பார்கள். இராஜா ஜெகத்ஜோதிர்மல்லா. 1650. "சங்கீத சாரசங்கிரகம்" "சங்கீதபாஸ்கரம்"என்னும் நூல்களை எழுதியிருக்கிறார். இராஜாஜெகதீஸ்வரராம வெங்கடேஸ்வர எட்டப்பரஜா. 1899. எட்டையாபுரம்சமஸ்தானாதிபதி. சங்கீதத்தில் அதிக பிரியமுள்ளவர். சங்கீதசாகித்தியத்தில் கெட்டிக்காரர். கமாஸ் இராகத்தில் 'முருகாதருகிலையா' என்ற கீர்த்தனமும் பைரவி இராகத்தில் 'வாவா நீ வள்ளிமணாளா' என்ற கீர்த்தனமும் செய்திருக்கிறார். இவருடைய சபையில் சுப்பராம தீக்ஷதர் சங்கீத வித்வானாயிருந்தார். தீக்ஷதர் செய்த "சங்கீத சம்பிரதாய பிரதர்சனி" என்ற புஸ்தகம் அச்சிடப் பொருளுதவி செய்தார். இராஜா சுரேந்திரமோகன் தாகோர். இவர், சிற்பம் சித்திரகலை முதலியசாஸ்திரங்களில் ஏக சந்தகிராகி என்றும் மகாவித்வான்கள் என்றும் பேர் எடுத்த தாகோர் குடும்பத்தில் ஒருவர். இவர் வங்காள சங்கீதசாகித்தியத்தில் சிறந்தவர். சங்கீதவிஷயமாய் அநேக நூல்கள் எழுதியிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் பரம்பரையைச் சேர்ந்தவர். இராஜா மான். இவர் குவாலியர்தேச அரசன். துருபத்முறையைஒழுங்குபடுத்தினார். இராஜு ஐயர். லால்குடி. பிடில்வாசிப்பார். இராணா கும்பகர்ண மகிமேந்திரா. 1450. "ரசிகப்பிரியா" "சங்கீத மீமாம்சா""சங்கீத இராஜ" என்ற நூல்களை எழுதியவர். இராதாகிருஷ்ண ஐயர். சித்தூர். இவர் திருவையாற்று தியாகராஜ ஐயரின்மாணாக்கர். பக்திரசமான கீர்த்தனைகளை மிக அழகாய்ப் பாடுவார். இராதாகிருஷ்ண பாகவதர். இவர் கும்பகோணத்திலிருக்கிறார். பிடிலும்ஆர்மோனியமும் நன்றாய் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர். இராதாகிருஷ்ண பாகவதர். இவர் தலைநாயர் பல்லவி சோமுஐயரின் குமாரர்.நன்றாய்பிடில் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர்.
|