இராதாகிருஷ்ணையர். லால்குடி இராமையரின் குமாரர். வாய்ப்பாட்டிலும்பிடில் வாசிப்பிலும் கெட்டிக்காரர். தற்காலத்திலுள்ளவர். இராதாகிருஷ்ணையர். கோபால பாகவதர் குமாரர். குன்னங்குடிகிருஷ்ணையரிடம் சங்கீதம் கற்றுத் தேர்ந்தவர். இராதாகிருஷ்ணையர். கிஞ்சிரா வாசிப்பார்.இவர் குமாரர் தியாகராஜ ஐயர் சுகமாய்ப் பாடுவார். இராமகாளாஸ்திரி ஐயர். இவருக்கு வீணை இராம காளாஸ்திரிஐயர்என்றுபேர். சங்கீதத்திலும் வீணையிலும் மகாவித்வான். இவர்மாணாக்கர் வீணை பெருமாள் ஐயர். தீபாம்பாள்புரம் கஸ்தூரிரெங்கையர் சுண்டி வேங்கடசுப்பையர், இவர்பிள்ளை சுண்டி வேங்கடரமணையர், சௌக்கம் வீரபத்திர ஐயர், சௌக்கம் சீனுவையர் இந்த 6-பேரும் சங்கீதத்தில் பேர் பெற்ற வித்வான்களாயிருந்தார்கள். இராமகிருஷ்ண ஐயர். சாலியமங்கலம். வீணை வாசிப்பார். இராமகிருஷ்ண பாகவதர். திருநெல்வேலி, வீணைவாசிப்பார். இராமகிருஷ்ணையர். இவர் திருவனந்தபுரம் சமஸ்தான வித்வான்.பரமேஸ்வர பாகவதரின் குமாரர். வாய்ப்பாட்டிலும் பிடிலிலும் தேர்ந்தவர். தற்காலத்திலுள்ளவர். இராமகிருஷ்ணையர். இராயவேலூர். சுகமாய்ப்பாடுவார். இராமகிருஷ்ணையர். B. A. ,B. L. , Retired Sub-Judge, Palghat. இவர்தேர்ந்த சங்கீத ஞானமுடையவர். நன்றாய்வீணைவாசிப்பார். தென்னிந்திய சங்கீதத்தைப்பற்றியும் சுருதிகளைப்பற்றியும் அநேக வியாசங்கள் எழுதியிருக்கிறார். இராமசாமி. கரூர். நன்றாய்ப்பாடுவார். இராமசாமி அண்ணாவி. இவர் திருநெல்வேலியில் தளவா முதலியார்காலத்தில் வீணைவாசிப்பதிலும் பரதசாஸ்திரத்திலும் கெட்டிக்காரராயிருந்தார். இவரிடம் திருநெல்வேலி வெள்ளையும், மாரிமுத்தும், சொர்ணமும், மதுரைகாளிமுத்தும், அவள் மகளும் பாட்டும் வீணையும் கற்றுக்கொண்டார்கள். இராமசாமி ஐயர். இவர் மைசூர் வேங்கடராமையர் குமாரர். இவரும் இவர்சகோதரர் இலட்சுமண ஐயரும் வீணை சுகமாய் வாசிப்பார்கள். இராமசுவாமி. கொரநாடு இராமசுவாமி என்று சொல்லுவார்கள். முத்துசுவாமிதீக்ஷதரின் மாணாக்கர். சங்கீத இலட்சண சமர்த்தர். இராமசுவாமி. திருவிடைமருதூர். இவர் மிருதங்கம் தாளம் தவறாமல்வாசிப்பார் இராமசுவாமி. மாயவரம். நாகசுரம் வாசிப்பார். இராமசுவாமி ஐயங்கார். ஸ்ரீரங்கம். வீணை வாசிப்பார். இராமசுவாமி ஐயர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சங்கீதவித்வானாயிருக்கிறார். இவர் பிள்ளைகளும் சங்கீதத்திலும் பிடில் மிருதங்கம் முதலியவைகளிலும் நல்ல அப்பியாசமுள்ளவர்கள். இராமசுவாமி ஐயர். காஞ்சிபுரம். சங்கீதவித்வான். இராமசுவாமி ஐயர். இவர் மகா வைத்தியனாத ஐயரின் தமையன். தமிழ்,தெலுங்கு, சங்கீதம் இவைகளில் சிறந்த புலவர். புராணத்தையும் மாணிக்கவாசகர், மார்க்கண்டேயர், பிரகலாதன் முதுலிய அநேகர் சரித்திரங்களையும் சீதாகலியாணத்தையும்
|