தமிழில் கீர்த்தனமாகச் செய்திருக்கிறார். திருவையாற்றந் தாதியும், திருச்செந்தூர் சந்தவிருத்தமும் பாடியிருக்கிறார். சேது சமஸ்தானத்தில் தமிழ் வித்வானாயிருந்த போது 'மோனைச் சிங்கம்' என்று பட்டப்பெயர் பெற்றவர். இவர் குமாரர் வையை R. சுப்பிரமணிய ஐயர், தஞ்சாவூர் S. P. G. High School-ல் தமிழ்ப்பண்டிதராயிருக்கிறார். இவருக்கு சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. இராமசுவாமி ஐயர். இவர் திருவனந்தபுரம் கிட்டுப்பாகவதர் குமாரர். பிடில்அற்புதமாய் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர். இராமசுவாமி ஐயர். இவர் திருக்கோடிக்காவல் கிருஷ்ணையரின் மாணாக்கர்பிடில் நன்றாய் வாசிப்பார். இராமசுவாமி ஐயர். இவர் வராகப்பையரின் வம்சத்தார். வீணையில் வித்வான். இராமசுவாமி தீக்ஷதர். கி. பி. 1735. வேங்கடேஸ்வரதீக்ஷதரின் குமாரர்.மத்தியாயர்ச்சுனத்தில் வேங்கிடமகியின் மாமன் பேரனான வேங்கிடவைத்தியனாத தீக்ஷதரிடத்தில் வீணையும் சதுர் தண்டிப்பிரகாசிகையும் கற்றவர். தஞ்சாவூரில் அமரசிங் மகராஜா காலத்தில் சமஸ்தான வித்வானாயிருந்து சன்மானம்பெற்றவர். இவரது பிள்ளைகள் முத்துசாமி தீக்ஷதர், சின்னசாமி தீக்ஷதர், பாலசாமி தீக்ஷதர் என்று மூவர். இந்தக் குடும்பத்தை மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரும் அவர் பிள்ளை சின்னையா முதலியாரும் ஆதரித்து வந்தார்கள். சின்னையா முதலியார் பேரில் இவர்செய்த 108 இராகதாள மாலிகைக்காக முதலியார் கனகாபிஷேகம் செய்தார். தன்னுடைய இரண்டாவது பிள்ளை சின்னசாமி தீக்ஷதருக்கு கண்பார்வைகுறைவுபட திருப்பதி வேங்கடாசல ஸ்வாமி சந்நிதியில் 45 நாளிருந்து 'வேகவாகினி' ராகத்தைப் பல்லவியாக எடுத்து இதர 48 இராகத்தில் ராகமாலிகை செய்து ஸ்வாமியை பிரார்த்தித்துக் கண்பார்வை பெற்றுத் திரும்பி வந்தார் என்பர். மீனாட்சி அம்மன் பேரில் 44 ராகத்தில் ஒரு ராகமாலிகையும், ரீதிகௌளா, இந்தோளா, மனோகரி, பூர்ணச்சந்திரிகா ராகங்களில் சௌக்க வர்ணங்களும், சங்கராபரண தான வர்ணங்களும், அநேக கீர்த்தனைகளும் வேங்கட கிருஷ்ண முத்திரையுடன் செய்திருக்கிறார். அம்சதொனி ராகத்தை விசேஷமாய்க் கற்பித்து பதங்கள் செய்திருக்கிறார். இராமசுவாமி பாகவதர். லால்குடி, சங்கீதவித்வான். இராமசுவாமி பாகவதர். மாயவரம், சங்கீதவித்வான். இராமசுவாமி பாகவதர். யோகி, இவர் கிட்டுபாகவதரின் மாணாக்கர்.சௌக்கமாயும் நன்றாயும் வாசிப்பார். இராமசுவாமி பாகவதர். திருவிசநல்லூர். சங்கீதவித்வான். இராமசேது பாலசுவாமி. இவர் வீணையும் மிருதங்கமும் வாசிப்பார்.இனிமையான குரலுடன் பாடுவார். க்ஷேத்திரியபதம் குப்பையரிடம் சொல்லிக்கொண்டவர். இராமச்சந்திர தொண்டமான் மகாராஜா. புதுக்கோட்டை. இவர் வீணைசுப்புக்குட்டி ஐயரிடம் சங்கீதமும் வீணையும் கற்றுக்கொண்டவர். நன்றாய்ப்பாடுவார். இராமச்சந்திர பாகவதர். இவர் திருவனந்தபுரம் வீணை கலியாணகிருஷ்ணஐயரின் தம்பி. இவரும் வீணை மிகுந்த சம்பிரதாயமாயும் சுத்தமாயும் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர்.
|