இராமச்சந்திர பாகவதர். இவர் எட்டையாபுரம் சமஸ்தான வித்வானாயிருந்தார்.சம்பிரதாயமாயும் தாளம் தவறாமலும் பாடுவார். இராமச்சந்திர பாகவதர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சங்கீதவித்வான். இராமச்சந்திரையர். திருவத்தூர். பிடில் நன்றாய் வாசிப்பார். இராமச்சந்திரையர். நாகப்பட்டினத்துக்குச் சமீபம் கீவளூர்.சுகமானசாரீரத்துடன் பாடுவார். தற்காலத்திலுள்ளவர். இராமண்ணாசுவாமி. தஞ்சாவூர். மடாதிபதி பரம்பரை. வீணை மிருதங்கம்வாசிப்பார். இராம தாசர். இவர் கோபன்னாமாத்தியரின் குமாரர். சுமார் 300வருஷங்களுக்கு முன்னிருந்தவர். பத்திராஜலம் தாலூகாவில் தாசில் தாராயிருக்கையில் சர்க்கார் பணத்தை இராமபத்திரர் கோயிலை விருத்திசெய்வதற்கும் சுவாமிக்கு நகைகள் செய்வதற்கும் உபயோகித்ததினால் நவாபினால் சிறையில் வைக்கப்பட்டபோது ஸ்ரீ இராமர் பேரில் அநேக கீர்த்தனங்கள் பாடி பிரார்த்தித்தனராம். அவை விசேஷமாய் வழக்கத்திலிருக்கின்றன. சங்கீத சாகித்தியத்தில் மிக வல்லவர். இராம தாசுலு. இவர் புதுக்கோட்டை சமஸ்தான சங்கீத வித்வான் சேஷாசலபாகவதரின் தம்பி. சங்கீத சாகித்யங்களில் தேர்ந்தவர். இராம முத்திரையுடன் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். இராம தாஸ். பெங்களூர். நன்றாய்ப் பாடுவார். இராமதாஸ் சுவாமி. தஞ்சாவூர். இவர் மகராஷ்டிர மடாதிபதி பரம்பரையைச்சேர்ந்தவர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். இராமநாதன். (Honourable P.) இவர் அரிச்சந்திர நாடகத்தை இங்கிலீஷில்எழுதி லண்டன் பட்டணத்திலும் ஐரோப்பாவின் பல பெரிய பட்டணங்களிலும் ஆட்டுவித்துப் புகழ் பெற்றவர். இலங்கை சட்ட நிர்மாண சபையின் அங்கத்தினருள் ஒருவர். இராம பாரதி, கலியாண பாரதி. இவர்கள் தஞ்சாவூர்ஜில்லா வேட்டனூர்கிராமத்திலுள்ளவர்கள். இருவரும் சங்கீதத்திலும் பாட்டிலும் சிறந்தவர்கள். இராமபாரதி சிவகங்கை சமஸ்தானத்திலும் கலியாணபாரதி புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் வித்வான்களாயிருந்தவர்கள். இராமபாரதிகுமாரர் கோபாலபாகவதர் நன்றாய்ப் பாடுவார். இராம ராவ். இவர் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். இராமாஞ்சுலு. இவர் சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். கர்நாடகமும்இந்துஸ்தானியும் நன்றாய்ப் பாடுவார். இராமாஞ்சுலு நாயுடு. (பதால) க்ஷேத்திரக்ஞர் பதங்களையும் சாரங்கபாணிபதங்களையும் செட்டி பட்டணம் சீனையர்பதங்களையும் நன்றாய்ப்பாடுவார். இராமஞ்சுலுநாயுடு. மிருதங்கம் சுகமாய்வாசிப்பார். இராமாமாத்தியர். கி. 1550. இவர் திம்மா மாத்தியரின் குமாரர். விஜயநகரசக்கிரவர்த்தியான வேங்கடாத்திரி ராஜ சபையில் சமஸ்தான பண்டிதர். பரதசாஸ்திரத்தில் மகா நிபுணர். இவருடைய சாமர்த்தியத்தைப் புகழ்ந்து சமஸ்தானத்தில் இவரை "அபிநவவரதாச்சாரியார்" என்ற பட்டப்பெயரால் அழைத்தார்கள். ஏலா, ராக
|