பக்கம் எண் :

184
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

கதம்பம், சுவராங்கம், கத்திய பிரபந்தம்,பஞ்சதாளேஸ்வரியம், ஸ்ரீரங்கவிலாசம் என்ற நூல்கள் செய்திருக்கிறார். ராஜாவின் விருப்பத்தின்படி சங்கீத இலட்சணங்களடங்கிய 'சங்கீதசுரமேளகளாநிதி' என்னும் அருமையான நூலையும் செய்திருக்கிறார்.

இராமாமிர்தம். உமையாள்புரம் கிருஷ்ணையர் தௌகித்திரர். வாய்ப்பாட்டிலும்பிடிலிலும் கெட்டிக்காரர்.

இராமானந்த எதீன்துருலு. இவர்சமஸ்கிருதத்தில் "கௌரிராகப்பிரபந்தம்"என்னும் சங்கீதநூல் செய்திருக்கிறார். அகோபிலருக்குப் பின்னிருந்தவரென்று தெரிகிறது.

இராமானுஜ ஐயர். திருநகரி. இவர் வீணையிலும் சாகித்தியத்திலும் நல்லஞானமுடையவர்.

இராமானுஜாச்சாரியார். இவர் திருப்பதி துரைசாமிஐயங்காரின் சகோதரர்வீணையிலும் பிடிலிலும் சிறந்த வித்வான்.

இராமானுஜாச்சாரியார். இவரை படக்கப்போட்டு இராமானுஜாச்சாரியார்என்றழைப்பார்கள். இவர் வீணை குப்பையரின் மாணாக்கர். வீணை சம்பிரதாயமாய் வாசிப்பார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார்.

இராமுடு பாகவதர். திருமலைராஜன்பட்டணம். இவர் சுரம் சப்தங்களோடுசேர்த்துப் பல்லவியை விஸ்தரித்துப்பாடுவார்.

இராமையங்கார். ஸ்ரீவில்லிபுத்தூர். பிடில் நன்றாய்வாசிப்பார். இவர் மாணாக்கர்கந்தாடை திருமலை ஐயங்கார் நன்றாய்ப்பாடுவார்.

இராமையங்கார். சங்கீத வித்வான்.

இராமையரும் இவர்பிள்ளை கிருஷ்ணசுவாமியும் பிடில் நன்றாய் வாசிப்பார்கள்.

இராமையர். இவரைத் திருக்குன்னம் இராமையர் என்று சொல்லுவார்கள்.அனந்தசயனம் கோவிந்தபெருமாளின் மாணாக்கர். இவர் ஷட்காலம் நன்றாய்ப்பாடுவார். இவரது பிள்ளை சாமிசாஸ்திரியாரும் வாய்ப்பாட்டில் மிகுந்த யோக்கியதையுடையவர்.

இராமையர். லால்குடி. பெரியவித்வான். இவர்பிள்ளை குருசாமி ஐயர்.நன்றாயும் சம்பிரதாயமாயும் பாடுவார். கடவாத்தியம் அற்புதமாய் வாசிப்பார். இரண்டாவது குமாரர் இராதாகிருஷ்ணையர் பாட்டிலும் பிடிலிலும் கெட்டிக்காரர்.

இராம் சாகேப். இவரை நிம்ளக்கர்சாய்பு என்றும் சொல்லுவார்கள். இவர்மிகவும் அழகாயும் சுத்தமாயும் பாடுவார். வீணை பிடில் நன்றாய் வாசிப்பார். பரோடா முதலான இடங்களுக்குப் போய்ப்பாடி மகாவித்வான் என்று பேர்பெற்றவர்.

இராயாச்சாரியார். இவர் விஜயநகரம் சமஸ்தான வித்வான். குருராயாச்சாரியாரின் மாணாக்கர். வடதேசத்து கத்துமார்க்கத்தில் அநேகஜாதிகளை தாளம் தவறாமல் பாடுவார்.

இருதய நாராயணர். "இருதயப்பிரகாசிகை" என்ற சங்கீத புஸ்தகம்எழுதியிருக்கிறார்.

இலட்சுமணாச்சாரியார். விசித்திர சதாவதானி கனபாடி வித்வான். இவர்அரிகதையிலும், பகவத் கதாப்பிரசங்கத்திலும் மிகச்சிறந்தவர்.

இலட்சுமிகாந்த மகாராஜா. இவர் சமஸ்கிருதத்திலும் சங்கீதத்திலும் மிகுந்தபாண்டித்திய முடையவர். கீர்த்தனங்கள் வர்ணங்கள் சாகித்தியங்கள் செய்திருக்கிறார். அவைகளை நாளதுவரையும் விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.

இலட்சுமிநாராயண பாபு. இவர் விஜயநகர சமஸ்தானத்தில் ருத்திரவீணைவாசிப்பதில் சிறந்தவர்.