பக்கம் எண் :

185
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

இலட்சுமையர். இவர் சதாசிவராவின் மாணாக்கரான வேங்கடரமணபாகவதரின் மாணாக்கர். சதாசிவராவின் கீர்த்தனைகளையும் தியாகையர் கீர்த்தனைகளையும் ஏற்பாடாய்ப் பாடுவார். இவரது மைத்துனர் ஐயலையாயும் சதாசிவராயர் கீர்த்தனைகளை நன்றாய்ப் பாடுவார்.

 உ

உபேந்திர கிசோரே. இவர் கல்கத்தாவில் பெரியவித்வான்.

எ

எம்பெருமான் ஐயர். பிடில் அற்புதமாய் வாசிப்பார். இவர்பிள்ளை தேசிகலுவீணையும் பிடிலும் சுகமாய் வாசிப்பார்.

ஏ

ஏனாதி. பரதசிட்சை சொல்லிவைப்பதில் வல்லவர்.

ஐ

ஐயாசாமி. நாகப்பட்டணம். இவர் பிடில் சுகமாய்வாசிப்பார்.

ஐயாசாமி. திருவாரூர். முத்துசுவாமி தீக்ஷதரின் மாணாக்கர். தான வர்ணபதங்கள் அநேகம் செய்திருக்கிறார்.

ஐயா பாகவதர். தியாகராஜ ஐயரின் முதன்மையானமாணாக்கர். வீணை பிடில்வாத்தியங்களிலும் இராகம் பல்லவி பாடுவதிலும் சிறந்தவர். இவர்மாணாக்கர் சிவராமகிருஷ்ணையர்.

ஐயாவையர். திருவலம் (North Arcot) இராகம் பல்லவி பாடுவதில்பேர்பெற்றவர். மைசூர் மகராஜா கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சமஸ்தானவித்வான். இவர் மாணாக்கர் மைசூர் சதாசிவராயர்.

ஐயாவையர். இவர் தஞ்சாவூர் வேங்கிடசுப்பையரின் குமாரர். ஆனை ஐயரின்சகோதரர். சரபோஜிமகராஜாகாலத்தில் (1787-1798) சமஸ்தானத்தில் வித்வானாயிருந்தவர். சமஸ்கிருதம் தமிழ் தெலுங்கு பாஷைகளில் சிறந்த பண்டிதர். இவருடைய மாணாக்கர் வையைச்சேரி துரைசாமி ஐயர் என்கிற பஞ்சனத ஐயர்.

ஓ

ஓதப்பையர். இவரை சிக்க ஓதப்பையர் என்றழைப்பார்கள். இவர் தஞ்சாவூர்சமஸ்தானத்தில் சிறந்த வீணை வித்வானாயிருந்தவர். வீணை விஜயவராகப்பையரும் சல்லகாலி வீரராகவையாவும் இவர் வம்சத்தில் பிறந்த சகோதரர்கள்.

க

கச்சி. மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்.

கச்சி சாஸ்திரி. இவர் சாமாசாஸ்திரியின் மருகர், நன்றாய்ப் பாடுவார். பிடிலும்வாசிப்பார். நல்ல தாளஞானமுள்ளவர்.