பக்கம் எண் :

186
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

கஸ்தூரிரங்கையர். தீபாம்பாள்புரம். இவர் வீணை சிறியகாளஸ்திரி ஐயரின் மாணாக்கர். சங்கீதத்தில் கீர்த்தி பெற்றவராயிருந்தார்.

கடுவா பாகவதர். இவருக்கே முத்தையாபாகவதர் என்றும்பேர்.திருவனந்தபுரம் சமஸ்தானத்தைச்சேர்ந்த சாம்பூர் வடகரையிலிருந்தார். வாய்ப்பாட்டிலும் தாள ஞானத்திலும் நல்ல விற்பத்தியுள்ளவர்.

கணபதி ஐயர். இவரை முக்கேகணபதிஐயர் என்றழைப்பார்கள். இவர்திருவனந்தபுரம் சமஸ்தான வித்வான். பரமேஸ்வரபாகவதரின் மாணாக்கர். மிகவும் நன்றாய்ப்பாடுவார்.

கணபதி ஐயர். சப்ஜட்ஜ். தஞ்சாவூர். வீணை வாசிப்பிலும் பாட்டிலும்வல்லவர்.

கணபதி சாஸ்திரிகள். மெலட்டூர். பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் சிறியதகப்பனார். தலை அசையாமல் கத்திகட்டிக்கெண்டு அதிக அழகாய்ப் பாடுவார். நல்ல தாளஞானமுள்ளவர். பெரியசமஸ்தானங்களில் விசேஷசன்மானங்களைப் பெற்றிருக்கிறார். பரதசாஸ்திரத்தில் இவரிடத்தில் நிருத்தங்களைக் கற்றுக்கொண்டவர்கள் தாளத்தில் கெட்டிக்காரராயிருக்கிறார்கள்.

கணேச கிரிக்கி-பாவா கிரிக்கி. இவர்கள் பூனாவாசிகள். துர்பத் கியால்தில்லானா தோம்ரீலு கஜ்ஜல் இலாவணி தறானால் முதலானவைகளையும் மற்றவர் பாடமுடியாத டப்பாக்களையும் நன்றாய்ப்பாடுவார்.

கண்ணுசாமி பிள்ளை. பரதசங்கீதசாகித்தியவித்வான். மலையாளம்,ராமநாதபுரம் முதலிய சமஸ்தானங்களில் அநேக பரிசுபெற்றவர். பரோடாசமஸ்தானத்தில் மாதத்துக்கு 75ரூபாய் சம்பளமும் 15 ரூபாய் படியும் பெற்று 10 வருஷம் அங்கிருந்து அநேகருக்குச்சொல்லி வைத்தவர்.

கண்ணுசாமி ராவ். சிட்டுசுவாமிராவ் சகோதரர். புதுக்கோட்டைசமஸ்தானத்திலிருந்தார்கள். கண்ணுசாமிராவ் புல்லாங்குழலிலும் பிடிலிலும் ஆர்மோனியத்திலும் சுரபத்திலும் சிறந்த யோக்கியதையுள்ளவர். தற்காலத்திலுள்ளவர்.

கந்தசாமி. தஞ்சாவூர் சுகமாய்ப்பாடுவார். நல்ல தாளஞானமுண்டு பரதம்ஆட்டிவைப்பதில் கெட்டிக்காரர்.

கந்தசாமி பிள்ளை. இவர் மதுரை மீனாட்சி சுந்தர ஆலயத்தின் நட்டுவாங்க பரம்பரையில் வந்த மீனாட்சி சுந்தர அண்ணாவியின் குமாரர். பரதசங்கீத சாகித்தியங்களில் தேர்ந்தவர்.

கலியாணகிருஷ்ணையர். திருவனந்தபுரம்சமஸ்தானம். வீணைவெகுவிசித்திரமாயும் இனிமையாயும் வாசிப்பார். இவர்தம்பி இராமசசந்திரபாகவதர் மிகுந்த சம்பிரதாயமாயும் சுத்தமாயும் வாசிப்பார்.

கலியாண சுந்தரம் பிள்ளை. இவர் பரத சங்கீத சாகித்தியங்களில் தேர்ந்தவர்.மதுரை ஆலயத்தின் நட்டுவாங்க பரம்பரையில் வந்த மீனாட்சி சுந்தரம் அண்ணாவியின் குமாரர்.

கலியாண பாரதி. பட்டுக்கோட்டைதாலுகா வேட்டனூரிலுள்ளவர்.புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்தார். நன்றாய்ப்பாடுவார்.

கல்லிநாதர். கி. பி. 1553. இவர் இராமாமாத்தியர் குலத்தில்பிறந்தஇலட்சுமணாச்சாரியாரின் குமாரர். இம்மிடி தேவராயசக்கிரவர்த்தி காலத்தில் விஜயநகரசமஸ்தானத்தில் சங்கீதவித்வான். சங்கீத இரத்னாகரத்துக்கு இவர் செய்திருக்கும் உரை எல்லாராலும் சிறந்ததாகக் கொண்டாடப்படுகிறது. இவருடைய மிகுந்த கல்வித்தேர்ச்சிக்