பக்கம் எண் :

187
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

காக சதுரகல்விநாதர் என்றும் அபிநவபரதாச்சாரியர் என்றும் கல்கிநாதரென்றும் அழைக்கப்பட்டார்.

கற்பபுரி, தர்மபுரி வாரு. இவர்கள் கற்பபுரி தர்மபுரி என்ற முத்திரையுடன்சிருங்காரசத்தில் அநேக ஜாவளிகள் செய்திருக்கிறார்கள்.

கன்னி. இவர் கும்பகோணம் பிடில் அப்பாயியின் குமாரர். மிருதங்கம்நன்றாய் வாசிப்பார்.

கன்னி. (தட்டாரக்கன்னி) இவர் பிடில் மிருதங்கம் கடவாத்தியம் நன்றாய்வாசிப்பார்.

கன்னையா. தஞ்சாவூர் கன்னையாகாரு. இவர் சங்கீதத்தில் பெரியஇலட்சணவித்வான். இவரது மாணாக்கர் முகுந்தையா, சிந்தாமணி, வட்டிசுப்பையா, தற்காலத்திலுள்ளவர்.

கா

காந்தீஸ்வர அண்ணாவி. மதுரை மீனாட்சி சுந்தரேசர் ஆலய நட்டுவாங்கபரம்பரையில் வந்தவர். இவர் பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர்.

காபிரியேல் உபதேசியார். நல்லூர் திருநெல்வேலிஜில்லா. அர்த்தபுஷ்டியுள்ளஅநேகம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.

காமராஜு. இவர் விஜயநகரம் சமஸ்தானத்திலிருந்தார். பிடில் வாசிப்பதிலும்தாளஞானத்திலும் அபிநயத்திலும் சிறந்த வித்வான்.

காளாஸ்திரி ஐயர். (வீணை) வீணைசாம்பஐயரின் சகோதரர். சரபோஜிமகராஜாகாலத்தில் (1798-1824) தஞ்சாவூரில் சமஸ்தான வித்வான். இவரது சம்சாரமும் இராஜஸ்திரீகளிடத்தில் வீணை வாசிப்பார்களாம். இவர் தன்பிள்ளையினுடைய நல்ல வீணை வாசிப்பைக்கேட்டு அசூயைப்பட்டார் என்று பரம்பரையில் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.

கி

கிட்டு பாகவதர். திருவனந்தபுரம் சமஸ்தானவித்வான். பரமேஸ்வரபாகவதரின்மாணாக்கர். சுரபத் நன்றாய் வாசிப்பார். இவர் மாணாக்கர் யோகி ராமசாமிபாகவதர்.

கிரிராஜகவி. திருவாரூர். மகாராஷ்டி ராஜாக்களில் இரண்டாவதுஇராஜாவானஷாஜி மகராஜா காலத்தில் (1687-1711) தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாயிருந்தார். சங்கீதத்தையே தனமாகக் கொண்டவர். பக்திரசமாயும் வேதாந்த சாரமாயும் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.

கிரிவாசப்பா. இவர் பரதம் சொல்லிவைப்பதில் கெட்டிக்காரர்.

கிருஷ்ணசாமி ஐயர். இவர் திருவத்தூர் வீணை குப்பையரின் குமாரர்.வீணையிலும் பிடிலிலும் கைதேர்ந்தவர். இவர் சாரீரம் கின்னரதந்தியின் ஓசைபோல் மிக இனிமையாய் இருக்கும். தற்காலத்திலுள்ளவர்.

கிருஷ்ணசாமி ஜாதவராவ்சாயேப். சிவாஜி மகராஜாவின் மைத்துனர்.நன்றாய்ப்பாடுவார். வீணை முதலிய வாத்தியங்களும் வாசிப்பார். இவர் மகா வைத்தியநாததையரின் மாணாக்கர்.

கிருஷ்ண பாகவதர். தஞ்சாவூர் கர்நாடக இந்துஸ்தானி சங்கீதங்களில்தக்கஞானம் உடையவர். சுரபத், பிடில், மிருதங்கம், கிஞ்சிரா இவைகளை சுகமாய் வாசிப்பார். யாவருக்கும் மனமகிழ்ச்சி யுண்டாகும்படி அரிகதையும் செய்வார். இவர் வடதேசத்து வித்வான்கள் கண்ணிகள் பாடிக்கொண்டு கதைசெய்வதையும் தென்னாட்டில்