பக்கம் எண் :

188
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

கீர்த்தனமும் வசனமுமாகச் சேர்ந்துநாடகம் ஆடுவதையும் ஒன்றாகச்சேர்த்து கீர்த்தனங்களும் திண்டி ஜாக்கிகளும் வசனமும் கலந்து கதை செய்வதில் முதல் முதல் ஆரம்பித்தவர். இவருக்குப் பிறகுதான் கதை செய்கிறவர்கள் என்ற வகுப்பார் புதிதாய் ஆரம்பமானார்கள். சபையோரை சந்தோஷப்படுத்தும்படியான சாமர்த்தியமுடையவர். பஞ்சாபிகேசபாகவதர் இவரின் முக்கிய மாணாக்கர்.

கிருஷ்ணப்பா. இவரை பிடாரம் கிருஷ்ணப்பா என்று அழைப்பார்கள். இவர்மைசூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானா யிருக்கிறார். வீணை நன்றாய் வாசிப்பார். மூன்றுஸ்தாயிகளிலும் நன்றாய்ப் பாடுவார்.

கிருஷ்ணப்பா. (நர்த்தக்க) இவர் தஞ்சாவூர்வாசி. மிக அழகாய் மேளம்வாசிப்பார்.

கிருஷ்ணமாச்சாரியார். இவரை குளத்தூர் கிருஷ்ணமாச்சாரியார்என்றழைப்பார்கள். இவர் பட்டணம் சுப்பிரமணியையரின் மாணாக்கர். பிடில் சுகமாய் வாசிப்பார். சிட்சை சொல்லிவைப்பதில் மிகத்தேர்ந்தவர்.

கிருஷ்ணமாச்சாரியார். வீணையிலும் பாட்டிலும் சிறந்தவர்.

கிருஷ்ணமாச்சாரியார். காலாட்டிப்பேட்டை. இவர் சென்னப்பட்டணம்சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். பிடில் நன்றாய் வாசிப்பார்.

கிருஷ்ணமூர்த்தி. இவரை வாசு கிருஷ்ணமூர்த்தி யென்றழைப்பார்கள். கமகமார்க்கத்தில் சம்பிரதாயமாயும், சுத்தமாயும் இனிமையாயும் வீணை வாசிப்பார்.

கிருஷ்ணாஜி. இவர் தஞ்சைநகரில் நாகசுரத்தில் கைதேர்ந்தவர்.

கிருஷ்ணஜி பல்லால் தேவால். (Retired Dy. Collector) இந்து சங்கீதத்தில்வழங்கிவரும் துவாவிம்சதி சுருதிகளைப்பற்றி இந்துஸ்தான் சங்கீதத்தில் அதிசமர்த்தரான அப்துல் கரீம் என்ற சங்கீதவித்வானைவைத்து ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்.

கிருஷ்ணையங்கார். முன்சீபு. திருச்சிராப்பள்ளி. வீணையிலும் பாட்டிலும்கெட்டிக்காரராயிருந்தார்.

கிருஷ்ணையங்கார். மதுரை, இவர் சங்கீதத்தில் தேர்ந்த வித்வான். ராகம்,பல்லவி, நன்றாய்ப் பாடுவார்.

கிருஷ்ணையர். இவரைப் பாலக்காட்டுகிருஷ்ணையர் என்று அழைப்பார்கள்.மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்.

கிருஷ்ணையர். உமையாள்புரம். இவர் மானம்புச்சாவடி வேங்கடசுப்பையரின்மாணாக்கர். சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவர். சிட்சை நன்றாய் சொல்லிக்கொடுப்பார். இவருடைய மாணாக்கர் மாயவரம் பஞ்சாபிகேச சாஸ்திரியார்.

கிருஷ்ணையர். வீணை கிருஷ்ணையா என்றழைப்பார்கள். இவர்ஆதிப்பையரின் குமாரர். வீணைவாசிப்பதிலும் சங்கீதத்திலும் மிக கெட்டிக்காரர். மைசூர், விஜய நகரம், புதுக்கோட்டை ராஜாக்கள்பேரில் 7 தாளங்களில் துருவதாளம் தவிர மற்ற 6 தாளங்களில் ஒவ்வொன்றை ஒவ்வொருவர் போட்டுக்கொண்டு வந்தால் தன் கையில் துருவதாளம் போட்டுப் பாடி பல்லவியில் கொண்டுவந்து முத்தாய்க்கும்போது இவ்வேழுதாளமும் அறுதியாய் தாள ஆரம்பத்தில் எடுக்கும் படியாய்ப் பாடப்பட்டவர். இவர் குமாரர் வீணை சுப்புக்குட்டி ஐயர்.

கிருஷ்ணையர். சங்கீத வித்வான்.