கிருஷ்ணையர். இவர் சல்லகாலிகிருஷ்ணையர். பல்லவி கோபாலையரின் குமாரர். சிவாஜி மகாராஜாகாலத்தில் (1824-1865) தஞ்சாவூர் சமஸ்தான வித்வான். வாய்ப்பாட்டிலும் வீணையிலும் சமர்த்தர். வீணையில் பக்கசாரணை தந்திமீட்டாமலே வாய்ப்பாட்டுப்போல சம்பிரதாயமாயும் எல்லாருக்கும் இனிமையாயிருக்கும்படியாயும் வாசிப்பார். வாய்ப்பாட்டும் வீணைவாசிப்பும் தென்றற் காற்றுக்குச் சமானமாச் சுகமாயிருந்ததால் இவர்க்கு 'சல்லகாலி கிருஷ்ணையர்' என்ற பட்டப்பெயர் உண்டாயிற்று. இவர் மாணாக்கர் திருவாலங்காடு தியாகராஜ தீக்ஷதர், வேணுக்குறிச்சி சதாசிவ ஐயர் காஞ்சிபுரம் நீலகண்டசாஸ்திரி, அகிலாண்டபுரம் தர்மதீக்ஷதர், மாயவரம் வீணை வைத்தியநாதையர். கிருஷ்ணையர் (கனம்). இவருக்கு கனம் கிருஷ்ணையர் என்று பெயர். இவர் உடையார் பாளையத்தார். தமிழிலும் சங்கீதத்திலும் வித்வான். பல்லவி பாடுவதிலும் சமர்த்தர். இவர் பதங்கள் சிருங்கார ரசங்களும் கடுமையான வர்ண கிரமங்களும் ஒரிக்கையுமாயிருக்கும். உடையார்பாளையம் ஜமீன்தார் பேரில் அநேக பதங்கள் செய்திருக்கிறார். இவரை தியாகராஜ ஐயர் காலத்திலிருந்ததாகச் சொல்லுகிறார்கள். கிருஷ்ணையர். திருக்கழுக்குன்றம். கத்திக்கட்டிக்கொண்டு கனம் பாடுவார்.தமிழில்அநேக கீர்த்தனைகளையும் பதங்களையும் செய்திருக்கிறார். கிருஷ்ணையர். இவரை தசவாத்தியம் கிருஷ்ணையர் என்று அழைப்பார்கள்.இவர் அப்பையர் குமாரர். அநேகவாத்தியங்களில் சிறந்தவராய் இந்துஸ்தானி நன்றாய்ப்பாடி பலசமஸ்தானங்களில் சன்மானம் பெற்றிருக்கிறார். கிருஷ்ணையர். இவர் தஞ்சாவூர் ஆமன்சம் குப்பையருடைய குமாரர்.நன்றாய்ப் பாடுவார். கிருஷ்ணையர். சிதம்பரத்திலிருந்தார். இவர் பிடிலில் அதிக சாதகம்செய்திருக்கிறார். சுகமாய் வாசிப்பார். கிருஷ்ணையர். உமையாள்புரம். சங்கீதத்தில் மிக கெட்டிக்காரர். இவர்மாணாக்கரும் பந்துவுமான ராஜாராம்ராவ் தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளை ஒழுங்காய்ப்பாடுவார். கிருஷ்ணையர். கும்பகோணம். கஷ்டமானசுரங்களை நன்றாய்ப்பாடுவார்.இவர்பாட்டு இனிமையாயிருக்கும். கிருஷ்ணையர். குன்னக்குடி. இவர் சங்கீதத்தில் அதிக கெட்டிக்காரர்.இவரிடம் கோபால பாகவதர் குமாரர் தாசாதி ஐயரும் ராதாகிருஷ்ணையரும் கற்றுக்கொண்டார்கள். கிருஷ்ணையர். இவர் சுரபத் கிருஷ்ணையர் என்ற பெயருடன்புதுக்கோட்டை சமஸ்தான வித்வானாயிருந்தவர். சுரபத்வாசிக்கிறதில் விசேஷ ஞானமுள்ளவர். தாளம் தவறாமலும் வெளியேயிருந்து கேட்கிறவர்களுக்கு வீணை வாசிக்கிறது போலத் தோன்றும்படியாயும் அவ்வளவு நன்றாய் அப்பியாசம் செய்திருந்தார். கிருஷ்ணையர். பழனி. கடவாத்தியம் வாசிப்பதில் கைதேர்ந்தவராயிருந்தார். கிருஷ்ணையர். குன்னங்குடி. இவர் இராமநாதபுரம் சமஸ்தானவித்வானாயிருந்து அநேகவர்ணங்களையும் தில்லானாக்களையும் செய்திருக்கிறார். கிருஷ்ணையர். அலசூர். பல்லவி சிவராமையரின் மாணாக்கர். இவர் மைசூர்சமஸ்தானத்தில் வித்வானாயிருந்து பல்லவி பாடுவதிலும் தாளஞானத்திலும் பிரக்யாதிபெற்றவரா
|