யிருந்து நாகஸ் ருத்தப்பாவுக்கும் பௌத்திரர் சுப்பண்ணாவுக்கும் ஸ்ரீ பெரும்புத்தூர் ரெங்காச்சாரியருக்கும் சொல்லி வைத்தார். அவர் குமாரர் சுப்பராயசாஸ்திரியார். கிருஷ்ணையர். இவரை திருப்புள்ளி கிருஷ்ணையர் என்றழைப்பார்கள். பிடில்நன்றாய் வாசிப்பார். கிருஷ்ணையர். இவரை மைலாப்பூர் கிருஷ்ணையர் என்று அழைப்பார்கள். இவர் சங்கீத ஞானமுடையவர். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். கிருஷ்ணையர். இவருக்கு தலைநாயர் ஜனன பூமி, சரபோஜி மகாராஜ காலத்தில் (1798-1824) தஞ்சாவூர் சமஸ்தானத்தில் விகடம் செய்து கொண்டிருந்தார். சங்கீதம் நன்றாய்த் தெரியும். இவருடைய பிள்ளை பல்லவி சோமு ஐயர். கிருஷ்ணையர். இவரை புதுச்சேரிக் கிருஷ்ணையர் என்றழைப்பார்கள். திருநெல்வேலியிலிருந்தார். பிடில் நன்றாய் வாசிப்பார். கிருஷ்ணையர். நிராகாட்டம். இவரை நிராகாட்டம் கிருஷ்ணையர் என்றழைப்பார்கள். விஜய நகரம் சமஸ்தானத்திலிருந்தார். நன்றாய்ப் பாடுவார். கிருஷ்ணையர். இவருக்கு கோட்வாத்தியம் கிருஷ்ணையர் என்று பெயர். அவர் கோட்வாத்தியம் நன்றாய் வாசிப்பார். கிரோஸ்ஸே. [J. Grosset (Lyons) France. ] இவர் இந்து சங்கீதத்தில் அதிக அபிமானமும் பிரியமும் உள்ள பிரான்சுதுரை. இவர் சமஸ்கிருதம் கற்று பரதர்செய்த பரத நாட்டிய சாஸ்திரத்தை பிரான்சுபாஷையில் மொழிபெயர்த்து அச்சிட்டிருக்கிறார். கிளமெண்ட்ஸ். (E. Clements, C. S) இவர் பம்பாய் இராஜதானி சத்தாராவில் ஜட்ஜாயிருந்தார். தேவால் என்பவர் இந்து சங்கீத துவாவிம்சதி சுருதிகளைப்பற்றி எழுதின கிரந்தத்துக்கு முகவுரை எழுதினதோடு தாமும் அதை அனுசரித்து "Introduction to the study of Indian music" என்ற புஸ்தகமும் எழுதியிருக்கிறார். கு குஞ்சு மேனன், சப்ஜட்ஜ். கள்ளிக்கோட்டை. வீணைவாசிப்பதிலும் பாட்டிலு கெட்டிக்காரர். குட்டையா செட்டியார். பல்லவி சோமு ஐயரின் மாணாக்கர். எல்லாவாத்தியங்களிலும் அப்பியாசமுண்டு. நன்றாய்ப்பாடுவார். சங்கீதவித்வான்களை ஆதரிப்பவர். குப்புசாமி. பெரியகுப்புசாமியும் சின்னகுப்புசாமியும் சகோதரர்கள். இவர்கள் ஐதராபாத்திலிருந்தார்கள். பெரியகுப்புசாமி பிடில் அழகாயும் சம்பிரதாயமாயும் வாசிப்பார். அனேகவர்ணங்களையும் செய்திருக்கிறார். சின்னகுப்புசாமியும் தமயனைப்போலவே பிடில் நன்றாய் வாசிப்பார். குப்புசாமி ஐயர். அமரசிங் மகாராஜா காலத்திலும் சரபோஜி மகாராஜா காலத்திலும் தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்தவர். இவருடைய கீர்த்தனைகள் பக்திரசமாயும் பதங்கள் சிருங்கார ரசமாயும் இருக்கின்றன. வரத வேங்கடமுத்திரையுடன் அநேக கீர்த்தனைகளையும் பதஸாஹித்தியங்களையும் செய்திருக்கிறார். குப்புசாமி ஐயர். இவர் சென்னை வீணை குப்பையரிடம் சிட்சை சொல்லிக் கொண்டு காஞ்சிபுரத்திலிருந்தார். பிடில் சம்பிரதாயமாய் வாசிப்பார். குப்பையர். 1850. இவரை வீணைக்குப்பையர், திருவத்தூர் குப்பையர், என்றும் சொல்லுவார்கள். வீணை அதிக அற்புதமாய் வாசிப்பார். பாடினாலும் வெகு அழகாயிருக்கும். வித்வான்களுக்கெல்லம் வெகு உபகாரியாயிருந்தார். பிடிலும் நன்றாய்
|