பக்கம் எண் :

191
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

வாசிப்பார். அநேகவர்ணங்களையும் கீர்த்தனைகளையும் தில்லானாக்களையும் செய்திருக்கிறார். இவருக்கு நூற்றுக்கணக்கான மாணாக்கர்களுண்டு. அத்தனைபேரையும் தன் வீட்டிலே வைத்து ஆதரித்து சிட்சையும் சொல்லிக்கொடுத்து வந்தார். இவர் ஸ்ரீ ராமநவமி உற்சவத்தையும் நவராத்திரி உற்சவத்தையும் விசேஷமாய்க் கொண்டாடுவார். மிகுந்த பக்தியும் அதி சுலபமுமானவர். சர்வ சங்கீதங்களையுமுடையவரான கானசக்கிரவர்த்தி என்று பட்டப்பேர் பெற்றவர். இவர் மாணாக்கர்களில் குரத்தவாசி வேங்கடரமணையா, சீத்தாராமையர், பொன்னுசாமி விசேஷமானவர்கள். கிருஷ்ணஸ்வாமிஐயர், இராமசுவாமி ஐயர், தியாகராஜ ஐயர் என்ற இவர் பிள்ளைகளும் சங்கீதத்தில் நல்ல பிரக்யாதியுள்ளவர்கள். இவர்களில் தியாகராஜ ஐயர் தகப்பனார் செய்த வர்ணங்களையும் தில்லானாக்களையும், கீர்த்தனைகளையும் புஸ்தகமாக அச்சிட்டிருக்கிறார்.

குப்பையர். இவரை ஆமன்சம் குப்பையர் என்றழைப்பார்கள். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் வித்வானாயிருந்தார். பதங்களை அழகாய்ப்பாடுவார். இவர் பிள்ளை கிருஷ்ணையரும் நன்றாய்ப் பாடுவார்.

குமாரசாமி முதலியார். ஆழ்வார்குறிச்சி. இவர் தளவாமுதலியாரின் பந்து, திருநெல்வேலியிலிருந்தார். சங்கீதத்திலும் வீணைவாசிப்பதிலும் கெட்டிக்காரர்.

குருசாமி. காஞ்சீபுரம். இவரும் இவர் தம்பி அருணாசலமும் மிருதங்கமும் கடவாத்தியமும் நன்றாய் வாசிப்பார்கள்.

குருசாமி ஐயர். இவர் சங்கீத வித்வான் லால்குடி இராமையரின் குமாரர், கர்நாடகம் சுத்தமாய்ப் பாடுவார். கடவாத்தியமும் வாசிப்பார்.

குருசாமி ஐயர். இவர் பட்டணம் சுப்புரமணிய ஐயரின் பந்து. அந்தனூர் சுப்பையரின் மாணாக்கர். பிடில் நன்றாய் வாசிப்பார்.

குருமூர்த்தி சாஸ்திரியார். இவர் திருநெல்வேலி ஜில்லா கயற்றாத்தில் இராமசாமி தீக்ஷதரின் கடைசி காலத்திலிருந்தார். சங்கீதத்தில் அதிசமர்த்தர். அநேக கீத பிரபந்தங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். சென்னப்பட்டணம் மணலி சின்னையா முதலியாரால் மிகவும் சன்மானிக்கப்பட்டவர்.

குருமூர்த்தி சாஸ்திரியார். இவருக்கு பைடால குருமூர்த்தி சாஸ்திரி என்றுபேர். சென்னப்பட்டணத்திலிருந்தார். கன நய தேசிகங்களை வெகு நன்றாயும் அழகாயும் பாடுவார். அநேக கீத பிரபந்தங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். இவர் தம்பி பைடால சுப்பராய சாஸ்திரியாரும் நன்றாய்ப்பாடுவார்.

குருமூர்த்தி நட்டுவர். இவர் திருநெல்வேலியிலிருந்து வந்த மகாதேவ அண்ணாவியின் குமாரர். வீணை வாசிப்பிலும் பரதசாஸ்திரத்திலும் சாகித்தியம் செய்வதிலும் சிறந்தவித்வான். இவரை சென்னப்பட்டணம் கன்னையசெட்டியார் அழைத்துக்கொண்டு போய் வைத்திருந்தார். இவர் முத்துசாமி, தம்பியப்பன் என்றபிள்ளைகளுக்கும் பொன்னுசாமி அப்பாக்கண்ணு என்ற மாணாக்கர்களுக்கும் மற்றும் அனேகருக்கும் சொல்லி வைத்தார்.

குருராயாச்சாரியார். விஜயநகரம் சமஸ்தானத்தில் சங்கீதவித்வான். கன நயதேசிகங்களை நன்றாய் அறிந்து பாடுவதில் பிரசித்தியடைந்திருந்தார். அநேக தானங்களையும் சுரஜதிகளையும் இராகச்சிட்டாக்களையும் சுரபல்லவிகளையும் பல்லவிமுறைகளையும்