கீதங்களையும் செய்திருக்கிறார். வீணையில் ஷட்காலங்களையும் விசாலமாய் வாசிப்பார். இவருக்கு மகாராஜா குடை வெண்சாமரை முதலிய விருதுகள் கொடுத்திருந்தார். இவரிடம் அநேகர்கள் சொல்லிக் கொண்டார்கள். குலசேகரப்பெருமாள். திருவனந்தபுரம் மகாராஜா. மலையாளம், தெலுங்கு, இந்துஸ்தானி, சமஸ்கிருதம், இங்கிலீஷ் முதலிய பாஷைகளில் நல்ல ஞானமுள்ளவர். சங்கீதத்தில் விசேஷ அபிமானமும் பாண்டித்தியமுடையவர். அநேக ரக்தி இராக தேசிக இராகங்களில் சௌக்க வர்ணங்களும் கீர்த்தனைகளும் பத்மனாபமுத்திரையுடன் செய்திருக்கிறார். அநேக சங்கீத வித்வான்களை வைத்து ஆதரித்து வந்தார். தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்து வடிவேல் நட்டுவனாரை வரவழைத்து தம்முடைய சமஸ்தானத்தில் சங்கீதம், பரதநாட்டியம் சொல்லிவைக்கும்படியாக வைத்திருந்து அவருக்கு யானைத் தந்தத்தினாலே வீணை பிடில் தம்பூர் முதலியவைகளைச் செய்து கொடுத்திருக்கிறார். குலாபு மாண்டில். இவர் அக்பர்சமஸ்தானத்தில் வித்வானாயிருந்த மீயான்டான்சினி (தாத்தாச்சாரியார்) யின் பரம்பரை. சிவகங்கை சமஸ்தானத்தில் சங்கீதவித்வானாயிருந்தார். இவருக்கு 10-வாத்தியங்களில் பாண்டியத்தியம் உண்டு. குலாப் மொய்தீன். ஐதராபாத்து இந்துஸ்தானியில் அழகாய்ப் பாடுவார். இவர் தமயன் பிள்ளை சித்தாரா தபேலா இனிமையாய் வாசிப்பார். நன்றாய்ப் பாடுவார். கூ கூவனசாமி ஐயர். நாட்டைக்குறிஞ்சி இராகத்தில் இவர் செய்திருக்கும் தாளவர்ணம் விசேஷ பிரக்யாதியுடையது. இவர் கார்வேடிநகர சமஸ்தான வித்வான் கோவிந்தசாமி ஐயரின் சகோதரர். கெ கெங்கைமுத்து பிள்ளை. திருநெல்வேலி. மதுரை அனவரத தானநாதர் சன்னிதானத்து வித்வான். மதுரையில் பரத சாஸ்திரம் அநேகருக்குச் சொல்லி வைத்திருக்கிறார். கவிராஜ நெல்லையப்பா பிள்ளை அனுமதிப்படி "நடனாதி வாத்தியரஞ்சனம்" என்னும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இவர் மதுரை ஜில்லா ராமநாதபுரம் கல்லுமடை மிராசுதார் குப்பையாண்டி பிள்ளை குமாரர் முத்திரப்ப பிள்ளையின் சகோதரர். கெங்கை முத்து நட்டுவனார். தஞ்சாவூர். பரத சங்கீத சாகித்யத்தில் தேர்ந்தவர். சுப்பராய நட்டுவனாரும் சிதம்பர நட்டுவனாரும் இவர் பிள்ளைகள். கே கேசவையா. இவருக்கு பொப்பிலி கேசவையா என்றுபேர். பொப்பிலி சமஸ்தானத்திலிருந்தார். சங்கீதத்தில் பெரிய வித்வான். அநேக சமஸ்தானங்களுக்குப்போய் சன்மானம் பெற்றிருக்கிறார். சரபோஜி மகாராஜாகாலத்தில் (1798-1824) தஞ்சாவூருக்கும் வந்திருக்கிறார். இவர் மற்றவர்களால் முடியாத அநேககாரியங்களைச் சாதித்திருக்கிறார்.
|