கொ கொண்டையர். இவர் வீணை பெருமாள் ஐயரின் தம்பி. சங்கீதத்தில் நல்ல ஞானமுள்ளவர். கொண்டையர். (சுரம். ) இவர் பந்தர்வாசி. சுரங்களையும் சப்த பல்லவிகளையும் கிரகசுரங்களையும் மிக ஒழுங்காய்ப்பாடுவார். இதினாலே இவரை சுரம் கொண்டையர் என்றழைத்தார்கள். கோ கோட்டை சாமித்தேவர். பாலவனத்தம் ஜமீன்தார். லால்குடி சங்கீதவித்வான் இராதாகிருஷ்ண ஐயரைக் கூடவேவைத்துக்கொண்டு சங்கீதத்திலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரராயிருந்தார். 12-வருஷங்களுக்கு முன்னிருந்தார்கள். கோட்டையா. பந்தர். இவர் பாடிக்கொண்டே பிடில் வாசிப்பார். இரண்டும் சேர்ந்து கேட்க இனிமையாயிருக்கும். கோதண்டராம ஐயர். ஸ்ரீரங்கம், கர்னாடக இராகத்தை பிடிலில் இங்கிலீஷ்மெட்டுப்படி சம்பிரதாயமாய் வாசிப்பார். இவர் தம்பியும் இவரைப்போலவே வாசிப்பார். கோபாலகிருஷ்ண பாரதி. இவர் ஆனைதாண்டவபுரத்திலிருந்தார். விசாலமான மனோபாவனை யுடையவர். நந்தனார் சரித்திரத்தையும் இராகமாலிகைகளையும் அநேக கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். கோபாலசாமி ஐயர். இவர் புதுக்கோட்டை சமஸ்தான சங்கீத வித்வான். மாதுருபூதையாவின் குமாரர். சங்கீத இலட்சணங்களை நன்றாயறிந்தவர். பழமையான கீர்த்தனைகளையும் இராகங்களின் அம்சங்களையும் அறிந்து நன்றாய் பல்லவிபாடுவார். கோபாலசாமி ஐயர். வீணை வரகப்பையரின் வமிசத்தார். வீணையிலும் சங்கீத இலட்சணங்களிலும் சிறந்த வித்வான். பல இடங்களிலும் போய் சன்மானம் பெற்றிருக்கிறார். இளையரசனேந்தல் ஐமீனில் வித்வானாயிருக்கிறார். கோபால நாயக்கர். சங்கீத வித்வான். தஞ்சாவூர். கோபால பாகவதர். வரகூர். அரிகதைசெய்வதில் உலகபிரசித்தியாயிருந்தார். கோபால பாகவதர். இராம பாரதி குமாரர். இவர் தகப்பனாரிடமும் தியாகராஜ ஐயரிடமும் கற்றுக்கொண்டு நன்றாய்ப்பாடுவார். கோபால பாகவதர். திருவனந்தபுரம் சமஸ்தானம் பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கர். நன்றாய்ப்பாடுவார். கோபாலையர். இவர் கரூர் வேங்கடராம ஐயரின் மாணாக்கர். பிடில் நன்றாய் வாசிப்பார். கோபாலையர். பல்லவிகோபாலையர். பச்சிமிரியம் ஆதிப்பையரின் மாணாக்கர். இவர் அமர சிங்மகாராஜா சரபோஜிமகாராஜ காலத்தில் தஞ்சாவூரில் சமஸ்தானவித்வான். அநேகவர்ணங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். இவர் செய்திருக்கும் 'வனஜாட்சி' என்ற தானவர்ணத்தைக் கவனித்தால் இவருக்கு சங்கீதத்திலுள்ள சுரசாகித்ய கற்பனைகள் தெளிவாய்த் தெரியும். காம்போதி தோடி ராகங்களில் அட தாளத்தில் தானவர்ணங்களை வேங்கடமுத்திரையுடன் செய்திருக்கிறார். பல்லவி பாடுவதில் அதிசமர்த்தராயிருந்ததால் பல்லவி கோபாலையர் என்றழைத்தார்கள்.
|