பக்கம் எண் :

194
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

கோபாலையர். இவரை நெரூர் கோபாலையர் என்றழைப்பார்கள். இவர் பாட்டு மிகுந்த இனிமையாயிருக்கும். தற்காலத்திலுள்ளவர்.

கோபால் நாயக். 1310 u டில்லிச்சக்கிரவர்த்தி அலாவுடீன் சேனாதிபதியான மாலிக்காபரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துப்போன சங்கீத வித்வான்களில் இவர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

கோவிந்த ஐயர். துரைசாமி ஐயரின் குமாரர். சங்கீதத்திலும் வீணையிலும் சிறந்தவர்.

கோவிந்தசாமி. கோயம்புத்தூர். பிடில் நன்றாய் வாசிப்பார்.

கோவிந்தசாமி ஐயர். கார்வேடிநகர் சமஸ்தானவித்வான். சங்கீதத்தில் நல்ல பாண்டியத்தியமுடையவர். தெலுங்கு பதங்களைச்சேர்த்து சிருங்காரரசத்தில் சாஹித்தியங்கள் செய்திருக்கிறார். தவரோஜ் கோதாரகெள்ளை இராகங்களில் அநேகவர்ணங்கள் செய்திருக்கிறார். ஆதிப்பையருக்கு முன்னிருந்தவரென்று தெரிகிறது.

கோவிந்தசாமி ஐயர். சங்கீத சாஹித்தியங்களில் நல்ல பாண்டியத்தியமுள்ளவர். இவர் சிறந்த சிலாக்கியமான 5 வர்ணமெட்டுகள் செய்திருக்கிறார். நன்றாய்ப்பாடுவார்.

கோவிந்தசாமிப்பிள்ளை. திருச்சிராப்பள்ளி. தற்காலத்திலுள்ளவர். நன்றாய் பிடில்வாசிப்பார்.

கோவிந்த சிவம். மத்தியார்ச்சுனம் துரைசாமி ஐயரின் குமாரர். இவரும் இவர் சகோதரர் சபாபதி ஐயரும் தியாகராஜ ஐயரிடம் கற்று சங்கீத சாகித்தியத்தில் பேர்பெற்றவர்களாயியருந்தார்கள். தமிழில் சிவபரமாய் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.

கோவிந்த தீக்ஷதர். இவர் தஞ்சாவூர் சமஸ்தான நாயக்க வம்ச இரண்டாவது அரசரான அச்சுதப்ப நாயக்கரிடம் (1572-1614) மந்திரியாயிருந்தவர். இவருக்குச் சங்கீதம் நன்றாய்த் தெரியும். அநேக இலட்சண கீதங்கள் எழுதியிருக்கிறார். இவர்தான் வீணைக்கு 24 மெட்டு வைத்தவரென்றும் அதற்குமுன் 12 மெட்டுத்தானுண்டென்றும் பிரகிருதி விக்ருதி பேதங்களுக்குத்தகுந்தபடி அப்போதைக்கப்போது மேளம் பண்ணிக்கொண்டிருந்த வழக்கம் இவர் காலத்திலிருந்ததென்றும் இவர்கள் பரம்பரையில் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.

கோவிந்த மாரன். இவர் திருவனந்தபுர சமஸ்தானத்திலிருந்தார். ஷட்கால கோவிந்ததாஸ் என்று சொல்லுவார்கள். சங்கீதத்திலும் வீணையிலும் சிறந்த வித்வான். திருவையாறு தியாகராஜ ஐயரிடம்வந்து அதி அற்புதமாய் வீணைவாசித்தபோது அவர் ஆச்சரியப்பபட்டு ''எந்தரோ மகானுபாவுலுவார்; அந்தரீகி வந்தனமு'' என்று பாடினார்.

 ச

சகஸ்த்ர புத்தி.இவர் பூனாவில் காயனசமாஜத்தின் காரியதரிசி.'சங்கீதபோர்' என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார்.

சங்கமசாஸ்திரி.இவர் பொப்பிலிசமஸ்தான நந்திகான வெங்கையரின் மைத்துனர்.வீணையும் பிடிலும் சுகமாய்வாசிப்பார்.

சங்கர ராவ், விஸ்வநாத ராவ்.இவர்கள் சகோதரர்கள்.தஞ்சாவூர் சமஸ்தான வைத்தியர்களாயிருந்தபோது சங்கீதத்தில் நல்லஞானமுடையவர் களாயிருந்தார்கள்.சங்கரராவ் சுரபத்சுகமாய் வாசிப்பார்.நன்றாய்ப்பாடுவார்.

சங்கரையர்.கண்ணனூர். இவர் சங்கீத சாகித்தியங்களில் தேர்ந்தவர்.