சங்கரையர்.இவர் திருவத்தூர் தியாகராஜ ஐயரின் மாணாக்கர்.மாணாக்கர் களுக்குச்சொல்லிவைப்பதில் சொல்வன்மையுள்ளவர். சஞ்சீவி ஐயர்.பச்சிமிரியம் ஆதப்பையரின் மாணாக்கர்.பல்லவி கோபாலையரின் தம்பி.சங்கீதத்தில் மிக கெட்டிக்காரர்.இவர் குமாரர் பல்லவி சீதாராமையர். சஞ்சீவி ராவ்.சரபசாஸ்திரியாரின் மாணாக்கர்.புல்லாங்குழல் நன்றாய் வாசிப்பார்.தற்காலத்திலுள்ளவர். சடகோப நாயுடு.இவர் வீணை அதிசம்பிரதாயமாய் வாசிப்பார். சட்டம்பிள்ளை.பிரகாசபுரம், திருநெல்வேலிஜில்லா, பொருட்செறிவான அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சதாசிவ ஐயர்.இவரை வேலுக்குறிச்சி சதாசிவ ஐயர் என்றழைப்பார்கள்.இவர் சல்லகாலி கிருஷ்ணையரின் மாணாக்கர்.சங்கீதத்தில் கெட்டிக்காரர். சதாசிவ பிரம்மம்.கரூர், கெரூர் முதலான இடங்களிலிருந்தவர்.இவர் செய்த சமஸ்கிருத கீர்த்தனைகள் இப்போதும் வழக்கத்திலிருக்கின்றன.சுமார் 175 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். சதாசிவம்.இவர் பிடிலிலும் ஆர்மோனியத்திலும் கெட்டிக்காரர். சதாசிவ ராயர்.இவர் மைசூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாயிருந்தவர்.சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் விசேஷபாண்டியத்தியமுடையவர்.அநேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் தில்லானாக்களையும் செய்திருக்கிறார்.இராயாவாள் கிருதிகள் என்று வழக்கத்திலிருக்கிறது.திரவிய சம்பன்னராயிருந்ததோடு வித்வான்களைச் சன்மானிக்கிறதில் தாராள மனதுடையவராயும் விதாணை தெரிந்து செய்கிறவராயுமிருந்தார். சத்தியநாதன் உபதேசியார்.தஞ்சாவூர்.இவர் பொருட்செறிவுள்ள அனேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சத்ரசிங். இந்துஸ்தானி பாட்டு நன்றாய்ப்பாடுவார். இவர் தம்பி குமாரர் சுந்தரசிங் பிடில் நன்றாய் வாசிப்பார். சந்திரசேகர சாஸ்திரியார்.பெங்களூர்.சங்கீத சாகித்தியத்தில் விசேஷ பாண்டித்தியமுள்ளவர்.அநேக ஜாவளிகளை பாலச்சக்கிர முத்திரையுடன் செய்திருக்கிறார். சந்திரபிரபு. இவர் பாவநகரில் சிறந்தவித்வான். சபாபதி. சிதம்பரம்.இவர் சிதம்பரம் கிருஷ்ணையரின் மாணாக்கர்.மிக இனிமையாய்ப் பாடுவார். சபாபதி. இவர் மேளம் வாசிப்பதிலும் ஆட்டி வைப்பதிலும் கெட்டிக்காரர். சபாபதி. அம்பாயிரத்தின் தம்பி.பாட்டிலும் பிடில் வாசிப்பதிலும் சிறந்தவர்.இவர்குமாரர் அப்பாய் பிடிலும் அவர் குமாரர் கன்னிமிருதங்கமும் நன்றாய் வாசிப்பார்கள். சபாபதி ஐயர். மன்னார்குடி.பரதசாஸ்திரத்தில் சிறந்தவித்வான்.இராஜகோபாலாங்கிதமாய் அநேக பதங்கள் எழுதியிருக்கிறார். சபாபதி ஐயர். இவர் மத்தியார்ச்சுனம் துரைசாமி ஐயரின் குமாரர்.தியாகராஜ ஐயரிடம் சொல்லிக்கொண்டு சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவராயிருந்தார். சபாபதி நட்டுவனார். தஞ்சாவூர்.பரதசங்கீதசாகித்தியங்களில் மிகத்தேர்ந்தவர்.அநேக ராஜாக்களாலும் பிரபுக்களாலும் தோடா, கண்டி முதலிய சன்மானங்கள் பெற்றவர்.
|