சபேசையர்.இவர் சாம்பசிவ ஐயரின் குமாரர்.மகா வைத்தியநாதையரின் மாணாக்கர்.சங்கீத சாகித்தியங்களில் கெட்டிக்காரர்.பிடில் மிகவும் நன்றாய் வாசிப்பார்.சென்னபட்டணத்திலிருக்கிறார்.இவர் மாணாக்கர் அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். சப்தரிஷி பாகவதர்.தஞ்சாவூர்.சமஸ்கிருத பண்டிதர், வேதபுராணிகர், சங்கீதத்தில் நல்ல ஞானமுள்ளவர்.கதைகள் செய்வார். சரப சாஸ்திரியார்.கும்பகோணம்.சங்கீத சாகித்தியங்களில் விசேஷ யோக்கியதை யுடையவர்.புல்லாங்குழலில் மிகஇனிமையாய் இராகங்களைப் பிரஸ்தரிப்பார். சர்வ சாஸ்திரியார்.(சிஷ்டு) பொப்பிலிசமஸ்தானத்தில் வீணையில் பெரியவித்வான்.இவர் தம்பி சிஷ்டு சலமையா. சலமையா.இவரை சிஷ்டு சலமையா என்றழைப்பார்கள்.இவர் வீணை சம்பிரதாயமாய் வாசிப்பார்.இவர் தம்பி சிஷ்டு பகவான்லு வீணையில் அதிக சாதகம் செய்திருக்கிறார். சவ்வியசாசி ஐயங்கார்.இவர் மைசூர் சமஸ்தானத்தில் வித்வானாயிருந்தார்.இரண்டு கையாலும் வீணை நன்றாய் வாசிப்பதால் 'சவ்வியசாசி' என்ற பட்டப்பெயர் சமஸ்தானத்திலுண்டாயிற்று.வீணை அதிகம் சாதகம் பண்ணியிருக்கிறார்.இவர் அநேகமெட்டு ஜாதிகளைச் சேர்த்து வாசிக்கும்போது மிகுந்த சுகமாயிருக்கும். சற்குணம்.(உவின்பிரட்) போதகர்.பக்திரசமான அநேககீர்த்தனைகள் செய்திருக்கிறார். சா சாமண்ணா. இவரை வீணை சாமண்ணா என்றழைப்பார்கள். மைசூரில் சமஸ்தான வித்வான். கமகமார்க்கங்களை வீணையில் அதிக சுகமாயும் சம்பிரதாயமாயும் வாசிப்பார். இவர் குமாரரும் வீணை நன்றாய் வாசிப்பார். மருகர் சுப்பராயர் வாய்ப்பாட்டு நன்றாய்ப் பாடுவார். பிறருக்கு சொல்லிவைக்கும் சொல்வன்மை உடையவர். சாமராஜ உடையார், மைசூர் மகாராஜா. சங்கீதத்திலும் வீணைவாசிப்பிலும் சிறந்தவர். சாமளையர். திருநெல்வேலி. பிடில் நன்றாய் வாசிப்பார். சாமா சாஸ்திரிகள். 1763 திருவாரூரில் பிறந்தார். சங்கீத சாகித்தியத்தில் சிறந்த வித்வான். சாமா கிருஷ்ணமுத்திரையுடன் அநேககீர்த்தனைகளையும் சாகித்தியங்களையும் சுரஜதிகளையும் தானவர்ணங்களையும் விசேஷ கற்பனைகளும் தாள நுட்பங்களும் வெளிப்படும் படி செய்திருக்கிறார். அலசூர் கிருஷ்ணையய்ர குமாரரான சுப்பராயசாஸ்திரியார் இவருடைய மாணாக்கர். சாமிநாத ஐயர். இவரை பழமாறனேரி சாமினாதையர் என்றழைப்பார்கள். மகாவைத்தியநாத ஐயரவர்களின் மாணாக்கர். இவர் சங்கீத லட்சிய, லஷணங்களில் சிறந்த வித்வான். மூன்றுஸ்தாயிகளிலும் பிடில் வாசித்துகொண்டு இனிமையாகப் பாடுவார். 'இராக விபோதினி' என்னும் சங்கீத நூல் எழுதி அச்சிட்டிருக்கிறார். தற்காலத்திலுள்ள வித்வான்களில் கர்நாடக ராகங்களை சுத்தமாய்வாசிப்பார். சாமிநாத சாஸ்திரி. திருக்குன்னம் இராமையரின் குமாரர். நன்றாய்ப்பாடுவார். சாமிநாதன். தஞ்சாவூர். இவருக்கு சங்கீதமும் பரத சாஸ்திரமும் நன்றாய்த் தெரியும். ஆட்டி வைப்பதில் நல்ல திறமையுடையவர். இவர் குமாரர் கோவிந்தசாமியும் தகப்பனைப்போலவே பெயரெடுத்தவர்.
|