பக்கம் எண் :

197
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

சாமிநாதன். தஞ்சாவூர். பரதசாஸ்திரப்படி ஆட்டிவைப்பதில் கெட்டிக்காரர்.

சாமிநாதன். சிதம்பரம். இவரும் வெங்குவும் சகோதரர்கள். தாளத்திலும் மிருதங்கத்திலும் பேர்பெற்றவர்கள்.

சாமியா பிள்ளை. இவர் தஞ்சாவூர் தியாகராஜ பிள்ளையின் குமாரர். வாய்ப்பாட்டிலும் பிடிலிலும் பாலசிட்சை சொல்லிவைப்பதில் தேர்ந்தவர்.

சாமிராவ். மிருதங்கம் வாசிப்பதில் கெட்டிக்காரர்.

சாமுக்குட்டி. இவரும் இவர் சகோதரர் அப்புக்குட்டியும் சங்கீதத்திலும் வாய்ப்பாட்டிலும் விசேஷ பிரக்யாதி யுடையவர்கள்.

சாமையா. இவர் பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கரான மகாதேவையரின் குமாரர். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் கெட்டிக்காரர்.

சாமையர். இவரும் இவர் குமாரர் பாலகிருஷ்ணையரும் பிடில் நன்றாய் வாசிப்பார்கள்.

சாமையர். கரூர். இவரும் இவர் சகோதரர் பெரியதேவையா சின்னதேவையாவும் நன்றாய்ப் பாடுவார்கள். பிடில் சம்பிரதாயமாய் வாசிப்பார்கள்.

சாம்ப ஐயர். இவருக்கு தஞ்சாவூர் வீணை சாம்பஐயர் என்று பேர். மைசூர் சமஸ்தானத்தில் சங்கீதவித்வான், வேதத்தையும் உபநிஷத்துக்களையும் வீணையில் நன்றாய்க் கானம் பண்ணுவார். கனமார்க்கம் இவர் சொத்து, தில்லானாக்களில் ஒவ்வொரு அட்சரத்தையும் மீட்டி அநேகபேதங்களுடன் நூறு வீணைகள் ஒரேகாலத்தில் வாசித்தால் எவ்வளவு கணிப்புண்டாக்குமோ அவ்வளவு கம்பீரமாய் வாசிப்பார். இவர் குமாரர் பங்காருசுவாமிஐயர்.

சாம்பசிவ ஐயர். சபாபதி ஐயரின் குமாரர். பிடில் நன்றாய் வாசிப்பார். இவர் குமாரர் சபேசையர்.

சாம்பமூர்த்தி ராவ். B. A. , B. L. , தஞ்சாவூர் இவர் வீணை வாசிப்பார். இவருக்கு நல்ல சங்கீத ஞானமுண்டு.

சாரங்க தேவர். காஸ்மீர தேசத்தவர். சொட்டிலதேவரின் குமாரர். டௌலத்தாபாத் என்னும் தேவகிரி ராஜ்த்தில் கி. பி. 1210-1247 வரை ஆண்ட சிம்மண ராஜசபையில் சமஸ்தான வித்வான். இவர் சமஸ்கிருதத்திலும் சங்கீதத்திலும் மிகுந்த பாண்டித்தியமுடையவர் "அத்தியாத்தும விவேகம்" என்ற வேதாந்த கிராந்தத்தையும் பரதர், மதங்கர், கீர்த்திதார், கோகலர், கம்பலர், அசுவதரர், ஆஞ்சிநேயர், அபிநவகுப்பதா, சோமேஸ்வரர் ஆகிய இவர்களுடைய அபிப்பிராயங்களை அனுசரித்து "சங்கீத ரத்னாகரம்" என்ற அருமையான சங்கீத நூலையும் சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கிறார். சந்தேகமில்லாதவர் என்று பொருள்படும் 'நிஸ்சங்கன்' என்றபட்டப் பெயரையுடைவர்.

சாரங்கபாணி. இவர் கார்வேடிநகரம் சமஸ்தானத்திலிருந்தார். சங்கீத சாஹித்தியங்க்ளில் மிகுந்த கெட்டிக்காரர். சிருங்காரரசமாய் அநேக பதங்கள் செய்திருக்கிறார்.

சாரங்கபாணி நாயுடு. இவரும் இவர் பாட்டனார் சடகோபநாயுடுவும் நன்றாய் வீணை வாசிப்பார்கள். சிட்சை சொல்லிக்கொடுப்பதில் தேர்ந்தவர்கள்.