சி சிங்களாச்சாரியார். இவர்களை தச்சூர் சின்னசிங்களாச்சாரியார், பெரியசிங்களாச்சாரியாயர் என்றழைப்பார்கள். சென்னப்பட்டணத்திலிருந்தார்கள். இவர்கள் சாமாசாஸ்திரியாரின் குமாரரான தஞ்சாவூர் சுப்பராயசாஸ்திரியாரிடமும் அவர்மாணாக்கர் பிடில் ரெங்காச்சாரியாரிடமும் சொல்லிக் கொண்டவர்கள். பெரிய சிங்களாச்சாரியார் சம்பிரதாயமாய்ப் பிடில் வாசிப்பார். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் சாகித்தியங்கள் செய்திருக்கிறார். சங்கீதத்தில் நல்ல பாண்டியத்தியம் உள்ளவர். அநேக கீர்த்தனைகளையும் ஜாவளிகளையும் செய்திருக்கிறார். இவர் தம்பி சின்ன சிங்களாச்சாரியார் வாய்ப்பாட்டிலும், சுரபத், பிடிலிலும் சம்பிரதாயமான பாண்டித்திய முடையவர். சங்கீதவித்தியார்த்திகளின் பொருட்டு இவர் தமையனார் செய்திருந்த கிருதிகளைக்கொண்டு சுரமஞ்சரி, காயகபாரிஜாதம், சங்கீதகளாநிதி, காயகலோசனம், காயகசித்தாஞ்சனம் முதலிய நூல்களைச்செய்து அச்சிட்டிருக்கிறார். இவர்கள் மாணாக்கர்களில் வேங்கடராமையா, ஜாலையா, துரைசாமி ஐயங்கார், இராமானுஜாச்சாரியார், தென்மடம் நரசிம்மாச்சாரியார், இவர் தம்பி வரதாச்சாரியார், பாபைய சாஸ்திரி முதலானாவர்கள் விசேஷித்தவர்கள். சிட்டு சுவாமி ராவ். இவர் புதுக்கோட்டை சமஸ்தானம் கண்ணுசாமிராவின் சகோதரர். சுரபத்தில் அதிகமாய் சாதித்திருக்கிறார். சுரபத்தில் இவர் வாசிப்பு அதிக அழகாயிருக்கும். சிதம்பர ஐயர். இவரைப் போலகம் சிதம்பரம் ஐயர் என்றழைப்பார்கள். இவர் வாய்ப்பாட்டிலும் கடவாத்தியத்திலும் விசேஷ பாண்டித்தியமுடையவர். சிதம்பர நட்டுவனார். தஞ்சாவூர், பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். சிந்தாமணி. சங்கீத வித்வான். சிந்தாமணி. இவர் தஞ்சாவூர் கன்னையா காருவின் மாணாக்கர். சாரந்தா மிகவும் நன்றாய் வாசிப்பார். சிவகாமி அப்பாபு அண்ணாவி. இவர் சிவகாசி ஆலயத்தின் சங்கீத பரம்பரையைச் சேர்ந்தவர். பரத சங்கீதத்தில் தேர்ந்தவர். சிவசாமி உடையார். தண்ணீர்குன்னம். இவர் பாட்டிலும் வீணை முதலான எல்லா வாத்தியங்களிலும் மகா வித்வான். சிவசாம்பையர். நாகப்பட்டணம், நன்றாய்ப் பாடுவார். சிவராம பாகவதர். இவரை அண்டமி சிவராமபாகவதர் என்றழைப்பார்கள். இவர் அரிகதை மிகவும் நன்றாய்ச் செய்வார். சிவராம பாகவதர். தஞ்சாவூர். சங்கீத சாகித்தியங்களிலும் அரிகதை செய்வதிலும் பிரக்யாதி பெற்றவர். இவரை சித்திரகவி சிவராமபாகவதர் என்றழைப்பார்கள். சிவராமாஸ்ரமுலு. 1827. திருவாரூரில் இருந்தார். இவர் "நிஜபஜனை சுகபத்ததி" என்னும் நூல் செய்திருக்கிறார். இவர் செய்த பக்திரசமான கீர்த்தனை அநேகமிருக்கிறது. சிவராமையர். இவருக்குப் பல்லவிசிவராமையர் என்று பேர். பல்லவி கோபாலையரின் சகோதரரான சஞ்சீவி ஐயரின் குமாரர். பல்லவி பாடுவதில் மிகுந்த சாமர்த்தியர். இவர் குமாரர் பிடில் சுப்பராவ்.
|