பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              203

 இஃது இருமுற்று இரட்டை.

     ‘நிரல்நிறுத் தமைத்தலும் இரட்டைத் தொடையும்
     மொழிந்தவற் றியலான் முற்றும் என்ப’,1

 என்னும் சூத்திரத்துக் காட்டிய நிரல்நிறைத் தொடைக்கு உதாரணம்.

[இன்னிசை வெண்பா]

     ‘அடல்வேல் அமர்நோக்கி! நின்முகம் கண்டே
     உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
     கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும்
     தடமதியம் ஆமென்று தாம்’2

 என்பதும் கண்டுகொள்க.

     அவற்றை ஒரு பொருள் இரட்டை, பல பொருள் இரட்டை, ஒரு முற்று
 இரட்டை, இரு முற்று இரட்டை என்று பெயரிட்டு வழங்குவாரும் உளர்
 எனக் கொள்க.

52) அந்தாதித் தொடை

     ‘ஈறு முதலாத் தொடுப்பதந் தாதியென்
     றோதினர் மாதோ உணர்ந்திசி னோரே’

 ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், அந்தாதித் தொடை ஆமாறு
 உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : ‘எழுத்தும், அசையும், சீரும், அடியும் இறுவாய்
 எழுவாயாகத் தொடுப்பது அந்தாதித் தொடை’ என்று மொழிந்தனர் புலவர்
 (என்றவாறு).

     ‘ஈறு முதலா’ எனவே, எழுத்தும், அசையும், சீரும், அடியும் இவற்றது
 முதலாகவே அடங்கும் எனக் கொள்க. என்னை?

     ‘அடியும் சீரும் அசையும் எழுத்தும்
     முடிவு முதலாச் செய்யுள் மொழியினஃ
     தந்தாதித் தொடையென் றறையல் வேண்டும்.’3

 எனவும்,


  1. தொல். பொ. 403, 2, யா. வி. 95 உரைமேற். 3. நற்றத்தனார்
 (யா. கா. 17. உரைமேற்.)