கொல்லன் அழிசி (பி-ம். கொல்லனழுசி.) (பி-ம்.) 2. ‘பணைமலர்’; 3. ‘வெருகுப்பல்’, ‘கஞலி’; 4. ‘நோயோர்க்’; 6. ‘றோற்றி’.
(ப-ரை.) தோழி-, பனி புதல் இவர்ந்த - குளிர்ச்சியை உடைய புதலின்கட் படர்ந்த, பசு கொடி அவரை - பசிய கொடியாகிய அவரையினது, கிளிவாய் ஒப்பின் ஒளி விடு பல்மலர் - கிளி மூக்கை ஒப்பாக உடைய ஒளியை வெளிப்படுத்தும் பல மலர்கள், வெருகு பல் உருவின் முல்லையொடு கஞல - காட்டுப் பூனையின் பல்லைப் போன்ற உருவத்தை உடைய முல்லை மலர்களோடு நெருங்கும்படி, வாடைவந்ததன் தலையும் - வாடை வீசுங்காலம் வந்ததற்கு மேலும்,