கபிலர். (பி-ம்.) 1. ‘யாமெங்’, ‘தாங்கலம்’; 2. ‘கெழுதகைமையினாள்’;4. ‘மலர்ப்பதம்’; 7. ‘கண்டவென்’.
(ப-ரை.) தோழி-, யாமே காமம் தாங்கவும் - நாம் காம நோயைப் பொறுத்து ஆற்றி இருப்பவும், கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் - கன்றுகளை வழியிலே செலுத்திய புல்லியதலையை உடைய சிறுவர்கள், மன்றம் வேங்கை மலர் பதம் நோக்கி - மன்றத்தின்கண் உள்ள வேங்கை மரம் மலரும் செவ்வியைப் பார்த்து, ஏறாது இட்டஏமம் பூசல் - அம் மரத்தின் மேல் ஏறாமல் செய்த இன்பத்தைத் தரும் ஆரவாரம், விண்தோய் விடர் அகத்து இயம்பும் - வானத்தை அளாவிய மலை முழையின்கண் எதிரொலி உண்டாக்கும், குன்றம் நாடன் - குன்றங்களை உடைய