தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதின்மூன்றாம் நூற்றாண்டு

  • பாடம் - 4

    A04134 பதின்மூன்றாம் நூற்றாண்டு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்களைச் சார்ந்த இலக்கியங்களையும், பிற இலக்கியங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது. இலக்கண நூல்கள், இலக்கண உரை நூல்கள் மற்றும் இலக்கிய உரை நூல்கள் ஆகியவை பற்றியும் கூறுகிறது. பிரபந்தங்கள், புராணங்கள் ஆகியவை பற்றியும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • ஆட்சி மாற்றம் இலக்கியத்தில் உண்டாக்கிய பாதிப்பினை உணரலாம்.

    • சிவஞானபோதம் என்ற சித்தாந்த சாத்திரம் முதன்முதலாகத் தமிழில் எழுதப்பட்ட காலம் இதுவே என அறியலாம்.

    • சைவ சித்தாந்தக் கொள்கையில் 95 விழுக்காட்டினைக் கொண்ட சிவஞானசித்தியார் தோன்றிய காலப் பகுதி இது என அறியலாம்.

    • சூதாட்டத்தின் தீமையை எடுத்துரைக்க உருவான காவியமான நளவெண்பா இக்காலத்தைச் சேர்ந்தது என அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 11:57:18(இந்திய நேரம்)