தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இருபதாம் நூற்றாண்டு - முதற்பகுதி

  • பாடம் - 5

    A04145 இருபதாம் நூற்றாண்டு - முதற்பகுதி

    இருபதாம் நூற்றாண்டு ‘தமிழின் மறுமலர்ச்சிக் காலம்’ என்று போற்றப்படுகிறது. மேலைநாட்டவர் தொடர்பு, ஆங்கிலக் கல்வி என்பனவும் தொழிற்புரட்சி, அறிவியல் வளர்ச்சி என்பனவும் இந்திய மக்கள் மனத்திலும் தமிழக மக்கள் மனத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி புதிய பாதையில் செல்ல,

    (1) தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (நாடகம்)
    (2) உ.வே. சாமிநாத அய்யர் (பதிப்பு)
    (3) பாரதியார் (கவிதை)
    (4) புதுமைப்பித்தன் (சிறுகதை)
    (5) பாண்டித்துரை தேவர் (தமிழ்ச்சங்கம்)
    (6) திரு.வி.க (உரைநடை)
    (7) மறைமலையடிகள் (தனித்தமிழ்)
    (8) வையாபுரிப்பிள்ளை (ஆராய்ச்சி)

    ஆகியோர் காரணமாய் அமைந்தனர். இவர்கள் காட்டிய வழியில் சுதந்திரத்துக்கு முன் தமிழக இலக்கிய வரலாறு எவ்வாறு வீறு பெற்றது என்பதை இந்தப் பாடம் விளக்கிச் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    தமிழ் நாடகம், உரைநடை, கவிதை என்பன பெற்ற மாற்றங்கள் பற்றி அறியலாம்.

    உரைநடை வகையில் நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு ஆகியன பற்றியும், உரையாசிரியர்களின் பணி பற்றியும் அறியலாம்.

    இலக்கணமும் மொழிநூலும் பெற்ற ஏற்றம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    நான்காம் தமிழ்ச்சங்கம் தோன்றிய வரலாறு பற்றி அறியலாம்.

    சுதந்திரத்துக்கு முன் தமிழில் புதிதாகத் தோன்றிய பிற தமிழ் இலக்கிய வகைகளைப் பற்றி அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-08-2017 11:51:59(இந்திய நேரம்)