தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குறுந்தொகை - 1

  • பாடம் – 4

    D01114 குறுந்தொகை - 1

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    குறுந்தொகை - பாடப்பகுதியின் முதல் 13 பாடல்களின் உள்ளடக்கம், உத்திமுறைகள், உருவமைப்பு ஆகியன இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.

    திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறும் ‘பெண்ணின் கூந்தல் மணம் இயற்கையா செயற்கையா’ என்ற கதை நிகழ்ச்சிக்குக் காரணமான பாடல் இப்பாடப் பகுதியில் உள்ளது.

    ‘எல்லாப் பிறவியிலும் உன்னையே கணவனாக அடைவேன்’ என்ற தலைவியின் மேன்மையை இப்பாடம் எடுத்துக் காட்டுகிறது.

    பிரிந்திருக்கும் தலைவியர் துயரம், தலைவியை அடைய முடியாதிருக்கும் தலைவனின் துயரம் ஆகியவை இப்பாடப்பகுதிப் பாடல்களில் குறிப்பாக வெளிப்பட்டிருப்பது எடுத்துக் காட்டப்படுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    உண்மையான காதல் பற்றிய உயர்வான எண்ணங்களை இப்பாடல்கள் மூலம் அறிய முடியும்.
    மென்மையான காதல், நாடகத் தன்மை அமைந்த குறிப்புப் பேச்சுகளால் அருமையாக வெளிப்படுவதை உணர்ந்து சுவைக்கலாம்.
    கபிலர், வெள்ளிவீதியார், செம்புலப் பெயல் நீரார் போன்ற புலவர்களின் பாடலில் அமைந்துள்ள மனங்கவர் உவமைகளைச் சுவைத்து மகிழலாம்.
    இயற்கை, மனிதவாழ்வின் பிரிக்கமுடியாத சிறப்புக்கூறு. இது சங்க இலக்கியத்தில் எந்த அளவுக்குச் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கிறது என்பதனை இப்பாடப் பகுதிப் பாடல்கள் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 18:16:15(இந்திய நேரம்)