தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01121-ஐங்குறுநூறு - 1

  • பாடம் - 1

    D01121 ஐங்குறுநூறு - 1

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் ஐங்குறுநூற்றின் ஆசிரியர்கள் மற்றும் அதன் அமைப்புப் பற்றிச் சொல்கிறது. நூலாசிரியர் ஐவரின் வரலாற்றுச் சுருக்கம், நூலமைப்பு, பாடல்கள் பகுப்பு, பகுப்பின் பெயரமைப்புப் பற்றியும் விளக்குகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடித்ததும் நீங்கள் கீழ்க்காணும் திறன் மற்றும் பயன்களைப் பெறலாம்.

    • ஐங்குறுநூற்றின் ஆசிரியர்கள் ஐவரைப் பற்றி அறியலாம்.
    • ஆசிரியர்கள், அவர்கள் பாடிய திணையில் வல்லவர்கள் என்பதை அறியலாம்.
    • ஐங்குறுநூற்றின் பொதுவான அமைப்பை அறியலாம்.
    • ஒவ்வொரு திணையின் நூறு பாடல்களும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பட்டு அவற்றுக்கு ஒரு பெயர் வழங்குவது காணலாம்.
    • பகுப்பிற்குப் பெயர்க்காரணம் அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:23:54(இந்திய நேரம்)