தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- - அமைப்பியலும் பின்னை அமைப்பியலும்

  • பாடம் - 1

    D06141 அமைப்பியலும் பின்னை அமைப்பியலும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்கள் பற்றிப் பேசுகிறது. அமைப்பியலும், அதனை அடுத்துத் தோன்றிய பின்னை அமைப்பியலும் தோன்றிய சூழல்கள் பற்றிப் பேசுகிறது. அவற்றிற்குப் பங்களிப்புச் செய்தவர்கள் இன்னின்னார் என்று பேசுகிறது.

        இவ்விரண்டு திறனாய்வு முறைகளின் அடிப்படைகள் பற்றி     விளக்குகிறது. சில எடுத்துக்காட்டுகளைத் தந்து, இவ்விரண்டு அணுகுமுறைகள் எவ்வாறு பின்பற்றக்கூடியன என்பது பற்றிச் சொல்கிறது. திறனாய்வின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு, இரு முக்கிய அணுகுமுறைகளை அறிந்து கொள்ள முடியும்.

    • அமைப்பியலின் பண்புகளை அறிந்து கொள்ளலாம்.

    • அமைப்பியலுக்கும் பின்னை அமைப்பியலுக்கும் உள்ள உறவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
    • சிறுகதை, நாவல், வருணிப்புக்கவிதை (Narratives), காப்பியம் முதலியவற்றை ஆராய்வதற்கு அமைப்பியல் மிகவும் உகந்த சாதனம் ஆகும். அது எவ்வாறு என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

    • இருநிலை எதிர்வு, கதைப்பின்னல், பன்முகவாசிப்பு, கட்டவிழ்ப்பு - முதலிய திறனாய்வு உத்தி முறைகளை அறிந்துகொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:48:11(இந்திய நேரம்)