தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-P10335 : பெரிய திருமடல்

  • பாடம் - 5

    பெரிய திருமடல்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழ்மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று மடல் இலக்கியம். மடல் இலக்கியங்களில் ஒன்று பெரிய திருமடல் ஆகும். இந்தப் பெரிய திருமடல் என்ற இலக்கியத்துள் இடம்பெறும் செய்திகளை இந்தப் பாடம் விளக்குகின்றது.

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களுள் இன்பம் சிறந்தது என்பது விளக்கப்படுவதைக் காட்டுகின்றது.

    பாட்டுடைத் தலைவனின் பல்வேறு பெருமைகளை எடுத்துக் காட்டுகின்றது.

    மடல் ஏறத் துணியும் தலைவியின் நிலை விளக்கப்படுகின்றது.

    மடல் ஏறத் துணிவதற்கான காரணம் சுட்டப்படுகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத்தினைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் பின்வரும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    • பெரிய திருமடல் என்ற இலக்கியத்துள் இடம்பெறும் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
    • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களின் தன்மைகளை அறியலாம்.
    • தலைவனாகிய இறைவனின் பெருமைகளைப் புரிந்து கொள்ளலாம்.
    • மடல் ஏறத் துணியும் தலைவியின் நிலையை விளங்கிக் கொள்ளலாம்.
    • தலைவி மடல் ஏறத் துணிந்ததன் காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:37:46(இந்திய நேரம்)