தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

  • பாடம் - 6

    P20126 மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்கின்ற சிக்கல்களை இந்தப் பாடம் எடுத்துரைக்கிறது. இலக்கிய மொழிபெயர்ப்பில், அறிவியல் மொழிபெயர்ப்புகளில், சட்டம், ஆட்சி, நிர்வாகம் போன்ற துறைசார்ந்த மொழிபெயர்ப்புகளில், இதழியல் துறைகளில் குறிப்பாக ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்புகளில் இயல்பாக எதிர்ப்படும் சிக்கல்களைக் கூறி, அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் பற்றி இந்தப் பாடம் விளக்க
    முற்படுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    பொதுவாக மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளும் சிக்கல்களை அறிந்து கொள்ளலாம்.
    இலக்கிய மொழிபெயர்ப்பு ஏறக்குறைய சிறப்பாக அமைவதற்கு வழி செய்யலாம்.
    இலக்கிய மொழிபெயர்ப்பின் போது எதிர்ப்படும் சிக்கல்களை அறிந்து தீர்வு கண்டு மொழிபெயர்ப்பைச் சிறப்பாகச் செய்ய இயலும்.
    புதிய துறைகளான அறிவியல்துறை மொழிபெயர்ப்பின் போது எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
    கலைச் சொல்லாக்கம் செய்கிறபோது சிக்கலின்றி, சிறப்பாக உருவாக்கலாம்.
    சட்டம், ஆட்சி, நிர்வாகம் போன்ற வாழ்வியல் துறைகளில் மொழிபெயர்ப்பு, பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவுகிறது. இதில் சிக்கலின்றிச் செயல்பட இப்பாடம் உதவலாம்.
    இதழியல் துறைகளில் செய்தி மொழிபெயர்ப்புதான் முக்கியமானது. அதில் சிக்கலின்றி மொழிபெயர்க்க இப்பாடக் குறிப்புகள் பயன்படலாம்.
    பெரும்பான்மையான தகவல்கள் ஆங்கிலமொழி வழியாகத் தமிழுக்கு வருவதால் மொழிபெயர்க்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க இந்தப் பாடப்பகுதி உதவலாம்.
    மொத்தத்தில் இந்தப் பாடம் மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு கையேடாகப் பயன்படலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:48:31(இந்திய நேரம்)