தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - -பழந்தமிழ் நூல்களில் சைவம்

  • E
    பாடம் - 1
    P20211 - பழந்தமிழ் நூல்களில் சைவம்

    பகுதி- 1

    பகுதி- 2



    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    "சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்பார் திருமூலர். சிவ வழிபாடு என்பது சைவநெறி ஆகும். தொல்காப்பியம், பத்துப்பாட்டு,  எட்டுத்தொகை ஆகிய பழந்தமிழ் நூல்களில் சிவன் என்ற சொல் இடம் பெறவில்லை என்றாலும் சிவனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறளிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களிலும் கல்லாடம் என்னும் நூலிலும் சிவனுக்குரிய அடையாளங்கள் பலவற்றைக் காணமுடிகிறது. இவற்றையும், சைவம், சைவவாதம் என்ற சொற்கள் முதன் முதல் மணிமேகலையில் இடம் பெறுவதையும் இப்பாடம் விளக்கிச் சொல்கிறது.




    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் சிவன் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பதை அறியலாம்.
    சிவனின் அடையாளங்கள் பலவற்றை எட்டுத்தொகையும்  பத்துப்பாட்டும் குறிப்பிடுவதைத் தொகுத்துக் கொள்ளலாம்.
    சிவனின் அடையாளங்களில் மிகுதியாக இடம் பெறுவது  எவையெனச் சுட்டிக் காட்டலாம்.
    சைவம், சைவவாதம் என்ற சொற்கள் மணிமேகலையில் முதன் முதல் இடம்பெறுவதை அடையாளங் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:07:06(இந்திய நேரம்)