தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam தேவாரம், திருவாசகம்

  • E
    பாடம் - 3

    P20213 - தேவாரம்,  திருவாசகம்

    பகுதி- 1

     


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    தேவாரம், திருவாசகம் என்ற இப்பாடத்தில் தேவாரம் தொகுக்கப்பட்டமை, தேவாரப் பண்முறை, தேவாரப் பணிகள் விளக்கப்படுகின்றன.

    மூன்று திருமுறைகளை இயற்றியருளிய திருஞானசம்பந்தர் பெருமை, அத்திருமுறைகளில் கூறப்படும் செய்திகள், அவர் பயன்படுத்திய புதிய யாப்பு முறைகள் முதலியன விரிவாகப் பேசப்படுகின்றன. அடுத்த மூன்று திருமுறைகளைப் பாடியருளிய திருநாவுக்கரசர் பற்றிய அறிமுகமும், அவர் பாடிய பாடல்களின் சிறப்பும், ஆறாம் திருமுறையாகிய திருத்தாண்டகத்தின் பெருஞ் சிறப்பும் இடம் பெறுகின்றன. அடுத்து, திருமுறை ஆசிரியர்களுள் மூன்றாமவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பனுவல் பற்றிப் பேசப்படுகின்றது. அவருடைய பக்திக் கனிவும் அரிய தொடர்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

    எட்டாம் திருமுறையைத் தந்தருளிய மாணிக்கவாசகரின் அனுபவ வெளிப்பாடுகள் திருவாசகத்தினின்றும் விளக்கப்படுகின்றன.
     

     


    ந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

     
    பன்னிரு திருமுறைகளுள் தேவாரத் திருவாசகங்களுக்கு உரிய இடத்தையும், இவற்றின் தன்மைகளையும் பெருஞ் சிறப்புகளையும் இனங்காணலாம்.
    தேவாரத் திருவாசகங்களின் அமைப்பு முறை, யாப்பு நிலை, பகுப்புமுறை, பாடல் தொகை ஆகியவற்றை வகைப்படுத்திப் பார்க்கலாம்.
    இவ்விரு தொகுப்புகளின் பண் அமைப்புகளையும், இசை வரலாற்றில் இவற்றுக்கு உண்டான தனி இடத்தையும் அடையாளங் காணலாம்.
    சைவ சித்தாந்த சாத்திர வளர்ச்சியிலும், அடியவர் வரலாறு கூறும் பெரிய புராண உருவாக்கத்திலும் மூவர் தேவாரம் ஆற்றிய பங்கினைத் தொகுத்துக் காணலாம்.
    தேவார மூவர் அருள் வரலாற்றையும் - அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களையும் தொகுத்துப் பயன் கொள்ளலாம்.
    மாணிக்கவாசகர் வரலாற்றையும், அவர் இயற்றிய நூல்களின் சிறப்புகளையும் தொகுத்துக் காணலாம்.
    தேவாரத் திருவாசக ஆசிரியர் காலங்களை உறுதி செய்து கொண்டு அவர்கள் காலத்திய சமய சமூக - மொழி வளர்ச்சிகள் குறித்து இனங் காணலாம்.
    தமிழகச் சைவ சமய வளர்ச்சி வரலாற்றில் இவர்கள் வழங்கிய நூல்கள் பெறும் பேரிடத்தைச் சுட்டிக் காட்டலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:11:10(இந்திய நேரம்)