தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web- அச்சிடுதலின் நவீனப் போக்குகள்

  • பாடம் - 5

    P20445 அச்சிடுதலின் நவீனப் போக்குகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இவ்வியலில் அச்சுக்கலை உருவான வரலாறு, இந்தியாவிற்கு அச்சுக்கலை கொண்டு வந்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அச்சுக்கலை தோன்றி வளர்ந்த வரலாறு, அச்சிடுதலில் பழைய, நவீன முறைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பல்வகையான எழுத்துக்கள் பற்றியும் இந்தப் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறலாம்.

    பாபிலோனியா, சீனாவில் அச்சுக்கலை வளர்ந்த விதத்தை அறியலாம்.

    அச்சடித்தல் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு படிநிலைகளில் வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்துள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.

    கோவா, தரங்கம்பாடி ஆகிய இரு இடங்களிலும் அச்சுக் கூடங்கள் நிறுவி ஆங்கிலேயர்கள் அச்சுக்கலை வளர உதவிய நிலையை அறியலாம்.

    கையால் அச்சுக் கோப்பது, அச்சுப்பொறியின் மூலம் அச்சுக் கோத்தல் போன்ற முறைகளில் எவ்வாறு அச்சடிப்பது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

    அச்சடிக்கும் இயந்திரங்களான காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரம், உருளை அச்சு இயந்திரம், சுழல் அச்சுப்பொறி இயந்திரம், ஆப்செட் அச்சடிக்கும் இயந்திரம் ஆகியன இயங்கும் விதம் பற்றி அறியலாம்.

    டெலி டைப் செட்டர், டெலக்ஸ், போட்டோ டைப் செட்டிங், கணினி அச்சு அமைப்பு போன்றவை இயங்கும் விதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    அச்சிடுவதற்குப் பயன்படும் புள்ளி வகைகள் பற்றியும் இப்பாடத்தில் படித்துப் புரிந்துகொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:23:31(இந்திய நேரம்)