இணைய உலாவி தமிழ் விசைப்பலகைகள்
|
1. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
2. |
தமிழ்
விசைப்பலகையினை நிறுவும் முறை |
|
|
உங்கள் இணைய உலாவியில் உள்ள "பக்க அடையாளப் பட்டை" (bookmarks
bar) யில் சேர்க்கக் கூடிய பொத்தான்களே பக்க அடையாளக்குறியீடு (Book
markelet) ஆகும்.
கீழ்கண்டவற்றில், தாங்கள் பயன்படுத்தி வரும் இணைய உலாவியினை தேர்ந்தெடுத்து
சுட்டியால் சொடுக்கி அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால்
போதும். இணைய உலாவியில் எந்த இடத்திலிருந்தும் சுருக்கு வழியில்
(shortcut) இதனை உருவாக்கத் தொடங்கலாம்.
- ஃபயர்ஃபாக்ஸ் (Firefox)
- முதலில், "பக்க அடையாளப் பட்டை" (bookmarks
bar) தெரியுமாறு உள்ளதா என்று சரிபார்க்கவும். இல்லையென்றால்,
பட்டி (Menu) → நோக்கு (view) → கருவிப்பட்டி (toolbar)
→ "Bookmarks toolbar" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள வரிசை எண் (1)-இல் உள்ள விசைப்பலகை
இடைமுகத்தில் தரப்பட்டுள்ள 4 விசைப்பலகைகளில் தங்களுக்கு
தேவையான விசைப்பலகை ஏதேனும் ஒன்றைச் சொடுக்கி இழுத்து "பக்க
அடையாளப் பட்டை"யில் இடவும்.
- இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
(Internet Explorer) - 8 & 9
- முதலில், "விருப்பப் பட்டை" (favourites bar)
தெரியுமாறு உள்ளதா என்று சரிபார்க்கவும். இல்லையென்றால்,
இணைய உலாவியின் மேலே உள்ள "பட்டி பட்டை" (Menu bar) யில்,
சுட்டியின் வலப்புறப் பொத்தானை அழுத்தி "விருப்பப்
பட்டை" (favourites bar) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள வரிசை எண் (1)-இல் உள்ள விசைப்பலகை
இடைமுகத்தில் தரப்பட்டுள்ள 4 விசைப்பலகைகளில் தங்களுக்கு
தேவையான விசைப்பலகை ஏதேனும் ஒன்றை சுட்டியின் மூலம் சொடுக்கி
இழுத்து "விருப்பப் பட்டை"யில் இடவும்.
- கூகிள் குரோம் (Google
Chrome)
- முதலில், "பக்க அடையாளப் பட்டை" (bookmarks bar) தெரியுமாறு
உள்ளதா என்று சரிபார்க்கவும். தெரியவில்லை என்றால், கருவிப்பட்டியில்
(Tools) இருந்து "Always show bookmarks bar” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள வரிசை எண் (1)-இல் உள்ள விசைப்பலகை
இடைமுகத்தில் தரப்பட்டுள்ள 4 விசைப்பலகைகளில் தங்களுக்குத்
தேவையான விசைப்பலகை ஏதேனும் ஒன்றைச் சொடுக்கி இழுத்து "பக்க
அடையாளக்குறி பட்டை"யில் இடவும்.
- சஃபாரி (Safari)
- முதலில், "பக்க அடையாளப் பட்டை" (bookmarks bar) தெரியுமாறு
உள்ளதா என்று சரிபார்க்கவும். இல்லையென்றால், பட்டி (Menu)
→ நோக்கு (View) → "Show Bookmarks Bar" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள வரிசை எண் (1)-இல் உள்ள விசைப்பலகை
இடைமுகத்தில் தரப்பட்டுள்ள 4 விசைப்பலகைகளில் தங்களுக்கு
தேவையான விசைப்பலகையில் ஏதேனும் ஒன்றைச் சொடுக்கி இழுத்து
"பக்க அடையாளக்குறி பட்டை"யில் இடவும்.
- ஒபெரா (Opera)
- நோக்கு (View) → கருவிப்பட்டி (Toolbars) என்பதில் “தனிப்பட்டை”
(“Personal bar”) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
- பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள வரிசை எண் (1)-இல் உள்ள விசைப்பலகை
இடைமுகத்தில் தரப்பட்டுள்ள 4 விசைப்பலகைகளில் தங்களுக்கு
தேவையான விசைப்பலகையில் ஏதேனும் ஒன்றைச் சொடுக்கி இழுத்து
"பக்க அடையாளக்குறி பட்டை"யில் இடவும்.
தமிழ்
விசைப்பலகை பயன்படுத்தும் முறை
- உங்கள் உலாவியில் உருவாக்கப்பட்ட பக்க அடையாளக்குறி (bookmarklet)/விருப்பங்கள்
(favourites) மீது சுட்டியின் மூலம் சொடுக்கவும்.
- குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள உரை உள்ளீட்டு பெட்டிகள் (input
boxes) மற்றும் உரை (Text) பகுதிகளின் பின்னணி நிறம் பின்வருமாறு
மாறுவதை நீங்கள் காணலாம். (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்றால்,
நீங்கள் பக்க அடையாளக்குறியினை இருமுறை சுட்டியின் மூலம் சொடுக்க
வேண்டியிருக்கலாம்)

- இப்போது தேர்ந்தெடுத்த விசைப்பலகையைப் பயன்படுத்தி நீங்கள்
தட்டச்சு செய்ய தொடங்கலாம்.
- தமிழ் மற்றும் பிற விசைப்பலகைக்கு மாற, இணையப்பக்கத்தில் தோன்றும்
‘அ’ வடிவ குறியீட்டைச் சொடுக்கவும் அல்லது பக்க அடையாளக்குறி
(bookmarklet)/விருப்பங்கள் (favourites) மீது சொடுக்கவும்.
|
3. |
|
|
|
தமிழ் விசைப்பலகை "பக்க அடையாளக்குறியீடு"
செய்வதில் சில அறியப்பட்ட சிக்கல்கள் உள்ளன.
அவை,
- "பக்க அடையாளக்குறியீடு" (Book marklet), உரை
உள்ளீட்டுப் பெட்டிகள் (Input boxes) மற்றும் உரை பகுதிகளில்
(Text areas) செயல்பட்டாலும், பாதுகாப்பு காரணங்களால் ஐஃப்ரேமில்
(iFrame) உள்ள சில கட்டுப்பாடுகளில் இயங்காது. எடுத்துக்காட்டாக:
ஜிமெயில், யாஹூ மெயில் போன்றவற்றின் மின்னஞ்சல் எழுதும் பெட்டிகள்
(Compose mail boxes).
- இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் (Internet Explorer),
ஒரு பக்கத்தில் "பக்க அடையாளக்குறியீட்டை" இயக்க, நீங்கள்
இருமுறை சுட்டியால் சொடுக்க வேண்டும்.
- சில உலாவிகளில், “அ” வடிவ குறியீடு குறிப்பிட்ட
உள்ளீட்டுப் பெட்டிகள் (Input boxes) மற்றும் உரை பகுதிகளில்
(Textareas) ஒரு முறைக்கு மேலே தெரியக்கூடும்.
- பயன்படுத்தப்படும் விசைப்பலகையிலிருந்து மற்றொரு
விசைப்பலகைக்கு மாற (எடுத்துக்காட்டாக, தமிழ்99 (Tamil99)
இலிருந்து தட்டச்சுக்கு (Typewriter) மாற்ற), குறிப்பிட்ட
இணைய பக்கம், ஒருமுறை ரிஃப்ரஷ் செய்யப்பட வேண்டும்.
- இந்த சிக்கல்களுக்கும், எதிர்காலத்தில் தோன்றும்
இன்னும் பிற சிக்கல்களுக்கும் தீர்வுகள் கண்டறியும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீர்வுகள் கிடைத்தவுடன் உடனடியாக சரி
செய்யப்படும்.
|
|
|
4. |
எழுத்துருக்கள் |
|
|
யூனிக்கோடு
(TAU)
|
|
|
|
டேஸ்16
(TAC)
|
|
|
|
5. |
தங்கள்
கருத்துகளைப் பதிவு செய்ய இம்முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்பவும் tamilvu@yahoo.com |
|
|