தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டுப் புறவியல் - கதைப் பாடல்கள்

  • பாடம் - 1

    A06121 நாட்டுப்புறவியல் - கதைப்பாடல்கள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

    இந்தப் பாடம் 'நாட்டுப்புறவியல்' என்றால் என்ன என்று விளக்குகின்றது. தமிழில் நாட்டுப்புறவியல் துறை வளர்ந்த வரலாற்றைச் சுட்டுகின்றது. நாட்டுப்புறக்கலை, நாட்டுப்புறப் பண்பாடு, நாட்டுப்புற இலக்கியம் என்ற மூன்றும் நாட்டுப்புற வகைமைகளாக இடம் பெற்றுள்ளதை எடுத்துரைக்கின்றது. இந்த வகைமைகளுள் 'கதைப் பாடல்கள்' எந்தப் பகுதியைச் சார்ந்தவை என்று விளக்குகிறது.

    கதைப் பாடல் தோன்றிய வரலாறு, அது கொண்டு முடியும் பெயர் முடிவுகள், அதன் வகைமை முதலியனவும் சொல்லப்பட்டுள்ளது. கதைப் பாடல்களின் வாயிலாக அதன் அமைப்பு, அது பின்பற்றும் மரபு, அதன் இயல்பு ஆகியவையும் சுருக்கமாக விளக்கப்படுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • இப்பாடத்தை நீங்கள் கற்பதன் மூலம் நாட்டுப்புறவியல் துறையைச் சேர்ந்த இலக்கிய வடிவங்கள் எவை எவை என்பதை அறியலாம்.
    • நாட்டுப்புறக்கலைகள், கதைகள், இலக்கியங்கள் இடம் விட்டு இடம் பரவுகின்ற தன்மை கொண்டவை என்பதனை அறியலாம்.
    • 'BALLAD' என்றழைக்கப்படும் கதைப்பாடல் வகையுடன் தமிழ்க் கதைப்பாடல்களை ஒப்பிட்டுக் காணலாம்.
    • சிந்து, கும்மி, அம்மானை, கதை, கதைப்பாடல் எனும் பெயர் முடிவுகளைக் கொண்டு அமைந்துள்ள கதைப்பாடல்கள் இடையே உள்ள அமைப்பு வேறுபாட்டினை அறியலாம்.
    • தமிழ்நாட்டுக் கிராம மக்களிடையே வழங்கும் சொல்லாட்சிகளை, உவமைகளை, பழமொழிகளை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:22:42(இந்திய நேரம்)