தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கதைப் பாடல்கள் - அமைப்பு, மொழிநடை, பயன்பாடு

  • .

    பாடம் – 5

    A06125 கதைப் பாடல்கள் - அமைப்பு, மொழிநடை, பயன்பாடு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

    கதைப்பாடல்கள் பொதுவாக எவ்வாறு தொடங்கி எவ்வாறு முடிகின்றன என்பதை இந்தப் பாடம் விளக்குகின்றது. தொடக்கத்திலிருந்து முடிவு வரை எவ்வாறெல்லாம் கதையைச் சொல்லிச் செல்கின்றனர் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

    மொழிநடை என்பது எவ்வாறு நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் பின்பற்றப்படுகின்றது. எதற்காகப் பின்பற்றப்படுகின்றது என்பதும் கூறப்பட்டுள்ளது. முடிவாக, கதைப்பாடலால் மக்கள் அடையும் பயன் என்ன என்பதைச் சுட்டிச் செல்கின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • கதைப்பாடல்களில் காணப்படும் மொழி நடையை அறிந்து கொள்ளலாம்.
    • மொழிநடையை அறிவதன் மூலம் அக்கதை வழங்கும் பகுதி எது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
    • உவமை எது, உருவகம் எது, பழமொழி எது என்பதை அறியலாம்.
    • இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள அமைப்பு முறையைப் பிறமொழிக் கதைப்பாடல்களோடு ஒப்பிட்டுக் காணலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:27:50(இந்திய நேரம்)