தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01144 பாரதிதாசனின் இசைப்பாடல்கள்

  • பாடம் - 4
     
    CO1144 பாரதிதாசனின் இசைப்பாடல்கள்
     

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
     

    E

    தமிழிசை வளர்ச்சிக்காகப் பாரதிதாசன் பாடியுள்ள இசைப்பாடல்களை இந்தப் பாடம் அறிமுகம் செய்கிறது.

    இசைப்பாடல்கள் வாயிலாகச் சிறுவர்களுக்கும், மகளிருக்கும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டுப் பற்றையும் தமிழ்மொழிப் பற்றையும் பாரதிதாசனின் இசைப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

    காதல் பாடல்களின் வாயிலாகக் கூட, தொழிலாளர் மேன்மையைப் பாரதிதாசனின் இசைப்பாடல்கள் அறிவிக்கின்றன என்பனவற்றை இந்தப்பாடம் எடுத்துரைக்கின்றது.


    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
     

    இப்பாடத்தை முறையே கற்போர் கீழ்க்காணும் பயன்களைப் பெறுவர்.

    • சமுதாய மறுமலர்ச்சி என்ற பாரதிதாசனின் குறிக்கோளை எட்டுவதற்கு இசைப்பாடல்கள் கருவியாக அமைந்ததை விளக்குதல்.

    • பாரதிதாசனின் பார்வையில் எவை இசைப்பாடல்கள் என்று விளக்கம் அளித்தல்.

    • பாரதிதாசனின் இசைப்பாடல்களின் வகைப்பாடுகள் பற்றி அறிதல்.

    • இசைப்பாடல்கள் வழியாகப் பாரதிதாசன் உணர்த்தும் தமிழின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துக்கூறுதல்.

    • பாரதிதாசனின் இசைப்பாடல்களில் சந்த நயம் பாராட்டல்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:02:42(இந்திய நேரம்)